பண்ணையின் புதிய பந்தங்கள்
பெரியக்காவை கோத்திராப்பட்டியில் திருமணம் செய்து கொடுக்கபட்டது, ஆனால் அவருக்கு அங்கு வாழவிருப்பமில்லாமல் மீண்டும் கீழப்பட்டிற்கு திரும்பி தனது பணியை இந்த மாபெரும் பண்ணைக்காக அர்பணித்தார். வேலையாட்களை முழுமையாக நிர்வகித்து வந்தார். தனது கணவரின் மறைவுக்கு பிறகு கோத்திராப்பட்டியிலுள்ள வீட்டில் வாழ்ந்து வருகின்றார். இராசாமணியை தேனூரிலுள்ள சேதுராமகோனாருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டது, இவர்களுக்கு செல்வி என்ற ஒரே ஒரு மகள் இருகின்றாள். அடைக்கப்பன் அவர்களுக்கு திருமணப் பேச்சு எடுக்கப்பட்டது, அபுத்தாவும், பெரியவண்டிக் கோனாரும் பெண் தேடும் பணியை ஆரம்பித்தனர். பெரியவண்டிக் கோனாரின் பரிந்துரைப்படி தாதனூரில் உள்ள லட்சுமி அவர்களை மணம்முடிக்க அனைவரும் ஒருமனதோடு சம்மதித்தனர். அதன்படி பெண் பார்க்கும் படலம் நடைபெற்றது. திருமணம் கோலாகலமாக [ஆரவாரம்] குறிப்பிட்ட தினத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. ஒரு நெருங்கிய குடும்ப நண்பர் திருமண பரிசாக ஒரு அழகிய மான் குட்டியை இவருக்கு வழங்கி சிறப்பித்தார். லட்சுமி அவர்கள் பண்ணைக்குஆச்சி "பண்ணக்கர்ச்சி" யாக அறிவிக்கபட்டு பண்ணைக்கு உறுதுணை புரிந்து வந்தார். எல்லாச்செல்வங்களுக்கும் சிறந்த செல்வமான குழந்தை செல்வம் இந்த பண்ணையில் பிறந்தது, இக்குழந்தைதான் எதிர்காலதில் இந்த ஊர்மக்களை நல்வழிபடுத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும். பண்ணையின் அடுத்த தலைமுறைக்கு தலைமகனாக செந்தில்குமார் அவர்களை 1975 ஆம் ஆண்டு அடைக்கபன் - லட்சுமி பெற்றெடுத்தனர். அதனையடுத்து மகன் சந்திர சேகர் 1977 ஆம் ஆண்டும், மகள் அமுதா 1979 ஆம் ஆண்டும், கடைசியாக மகன் காந்தி 1981 ஆம் ஆண்டும் பிறந்தனர்.
அடுத்தபடியாக இராசப்பன் அவர்களுக்கு மேட்டுப்பட்டியிலிருந்து செல்லமாள் அவர்களை மணம்முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்த திருமண விழாவிற்கு கோத்திராப்பட்டியிலுள்ள இவரது தாய்மாமன் கோபால்கோனார் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இவரது சிந்தனையில், நெருங்கிய சொந்தமான தேனூரில் உள்ள பெண்ணை இராசப்பன் அவர்களுக்கு திருமணம் முடிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தார். இருப்பினும் அடைக்கப்பன் மற்றும் அபுத்தா அவர்கள் மேட்டுப்பட்டி பெண்ணை இராசப்பன் அவர்களுக்கு மணம்முடிக்க முடிவெடுத்தார்கள், அதன்படி குறிப்பிட்ட தினத்தில் திருமணம் கீழப்பட்டி இல்லத்தில் நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் இவரது தாய்மாமன் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது. இவர்களுக்கு முதல் மகளாக ஈஸ்வரி 1977 ஆம் ஆண்டும், முதல் மகன் இரவி 1979 ஆம் ஆண்டும், மகன் கிருஷ்ணன் [கிட்டு] 1981 ஆம் ஆண்டும், மகன் போஸ் 1983 ஆம் ஆண்டும், கடைசியாக மகன் மோகனசுந்தரம் [சக்தி] 1985 ஆம் ஆண்டும் பிறந்தனர். மூத்த மகள் ஈஸ்வரி ஒரு கோரவிபத்தில் 1981 ஆம் ஆண்டு உயிர் நீத்தார், ஒட்டுமொத்த மக்களும், பண்ணையும் மீளாத்துயரத்தில் ஆழ்ந்தனர்.
மூக்காண்டிக்கோனாரின் செல்ல மகனான சுவாமிகண்ணு அவர்கள் இரண்டு இளநிலை மற்றும் இரண்டு முதுநிலை பட்டங்களை பெற்று இவரது காலத்தில் அதிகம் படித்தவர் என்ற பெருமைக்குறியவராய் விளங்கினார். சிறந்த சட்டவல்லுநராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். ஒருவன் தன்னை எவ்வாறு தன் தொழிலில் அர்பணித்துகொள்ள வேண்டும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். இவருக்கு வல்லக்கோன்பட்டியைச்சேர்ந்த யசோதையுடன் 1984 ஆம் ஆண்டு திருமணம் கீழப்பட்டி இல்லத்தில் நடைபெற்றது. இவர்களுக்கு மூத்த மகன் இளங்கோ [நவீன்] 1985 ஆம் ஆண்டும், இளய மகன் சரண்குமார் 1987 ஆம் ஆண்டும் பிறந்தனர்.
இன்றய தலைமுறைகள்
மூக்காண்டிக்கோனார், அடைக்கப்பன் இவர்களை தொடர்ந்த தலைமுறையான இன்றய தலைமுறையை மூப்பு வரிசைபடுத்தினால் செந்தில்குமார், சந்திர சேகர், இரவி, அமுதா, கிருஷ்ணன் [கிட்டு], காந்தி, போஸ், இளங்கோ [நவீன்], மோகனசுந்தரம் [சக்தி] மற்றும் சரண்குமார் ஆவார்கள். ஒன்பது ஆண்குழந்தைகளும், ஒரே ஒரு பெண்குழந்தையும் பண்ணைக்கு பெருமை சேர்த்தனர்.
No comments:
Post a Comment