மீன் தொட்டி

Sunday, September 5, 2010

மோழியின் ஆழம் - ஒரு விவசாயப்பண்ணையின் சரித்திரம் - பகுதி 08

பண்ணையின் அடிப்படை விவசாயம்

பண்ணையின் அடிப்படை விவசாயம் முன்னதாகவே இங்கு பதியப்பட்டுள்ளது. படிப்பதற்கு சொடுக்கவும்.


அபுத்தாவின் மறைவு

பழனியாயி அவர்களை பண்ணை குழந்தைகள் அனைவரும் அபுத்தா என்று அழைத்து அளவுகடந்த அன்பை பெற்றார்கள், இவர் மிகவும் புத்தி கூர்மையுடையவர், எச்செயலையும் மிக கவனத்துடனும், சிறப்பாகவும் செய்வதில் கைதேர்ந்தவர். இவரது காலத்து பெருவாரியான பண்ணை குழந்தைகள் முக்கியமான கல்வி கற்க்கும் பருவத்தில் இவரின் வளர்பில்தான் கல்விகற்று வளர்ந்தார்கள். இவர் படிப்பறிவு இல்லாதிருந்தும் எண்ணிலடங்கா பழமொழிகளை கேட்டறிந்து அதனை தன் வாழ்நாளில் பயன்படுத்தி யாவருக்கும் எளியமுறையில் தான் சொல்லவரும் கருத்துகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் சொல்லி முடிப்பார். இவர் ஒருமுறை கிட்டுவிடம் பொறியியல் துறையை பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் மிக நுனுக்கத்தோடு கேட்டறிந்தார். இவர் எந்த நேரமும் ஏதேனும் ஒரு பணியை செய்து தன் நேரத்தை பயனுள்ளதாகவே செலவிடுவார். தனது கடைசி மூச்சுவரை தன் வேலைகளை தானே செய்துகொண்டார்.

இவரின் பேத்தியான அமுதா திருமணத்திற்கு பின்னர் ஏற்பட்ட மிகக்கசப்பான அனுபவத்தினால் 2000 மாம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். பண்ணைக்கு இந்த பேரிழப்பால் அனைவரது மனதையும் துக்கம் கவ்விகொண்டு மீளாத் துயரத்தில் ஆழ்தியது. இந்த இளவயதில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறிப்பாக இவரை வெகுவாக பாதித்தது, இருபினும் இழப்பு பேரிழப்புதான் ஆனால் தற்கொலை அதற்கு முடிவாகாது என்று அவர் கூறி கண்ணீர்விட்டார். அபுத்தா அவர்களின் உயிர் இம்மண்ணுலகைவிட்டு 2001 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் நாள் அதிகாலை 5 மணியளவில் விண்ணுலகம் சென்றது. இவரின் மறைவு மிகபெரிய இழப்பாக இந்த ஊர்மக்களுக்கும் பண்ணைக்கும் அமைந்தது. இந்நாள் இந்திய நாட்டிற்கு மிகச்சிறந்த நாளான குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் 2001 ஆம் ஆண்டு இதே நாள் குசராத் மாநிலத்தில் ஏற்பட்ட உயர் அலை நிலநடுக்கத்தால் எண்ணற்ற உயிர் சேதமடைந்து மிகவும் துயரமான நாளாகவே இந்திய நாட்டிற்கு அமைந்தது.

அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய குடமுழுக்கு

மூக்காண்டிகோனாரின் தலைமையில் உருபெற்ற இத்திருகோயில் கட்டடம் உலக வளர்ச்சியை முதன்மையாக கொண்டு புதிய ஆலய கோபுரம் கட்டுவதற்கு அடைக்கப்பன் அவர்கள் தலைமையில் ஊர்மக்கள் ஒத்துழைபுடன் திட்டம் உருவாக்கபட்டு 2003 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கபட்டது. ஆலய கருவறை கோபுரம், பிள்ளையார் கோயில் மற்றும் மணிமண்டபம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மிகச்சிறப்பாக முடிக்கப்பெற்று 2005 ஆம் ஆண்டு சூன் 10 ஆம் நாள் பண்ணைகாரர் தலைமையில் வெகுசிறப்பாக குடமுழுக்கு திருவிழா நடத்தபட்டது.

சுவாமிகண்ணு அவர்களின் மாளிகை திட்டம்

சுவாமிகண்ணு அவர்கள் 2000 மாம் ஆண்டு தன் சொந்த செலவில் மாபெரும் மாட மாளிகையை கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டு, களத்துபட்டியான் காட்டில் அடிகல் நாட்டுவதாக இருந்த இத்திட்டம் சில அரசியல் நடவடிக்கையால் மாற்றம் செய்யப்பட்டு பின்னர் மணியார் காட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த அதே ஆண்டு இறுதியில் அடிக்கல் நாட்டினார். இம்மாளிகையை தன் தாயார் திருமதி. பழனியாயிக்காகவும், தன் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்றெண்ணி இத்திட்டத்தை தொடங்கினார். அதன்படி வேலைகள் ஆரம்பிக்கபட்டு, திகைக்கவைக்கும் வடிவமைப்பை பெற்று 2005 ஆம் ஆண்டு திறப்பு விழா திரு. அடைக்கப்பன் அவர்கள் தலைமையிலும், மதிப்பிற்குறிய திரு. அழகர்சாமி அவர்கள் முன்னிலையிலும் கோலாகலமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மேலும் பலதிட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறார்.

No comments:

Post a Comment