வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பெருவிழா 8 மற்றும் 9 செப்டம்பர் 2010 ஆகிய நாட்களில் மிகுவிமர்சையாக ப்ஹரைன் புனித இருதய தேவாலயத்தில் கொண்டாடப்பட்டது. ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கப்பட்டது. தேவாலயத்தின் முக்கிய நிகழ்ச்சியான அன்னை மாதாவின் தேர் பவனி மக்கள் வெள்ளத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழில் செபமாலையும், சிறப்பு கூட்டுத்திருப்பலியும் நடைபெற்றது. நிறைவு நாளான 9 செப்டம்பர் 2010 மாலை 9 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. நிறைவாக தேவாலயத்தில் அன்னையின் அருளால் அனனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது.
மாதாவை நோக்கி செய்த ஜெபம்
மிகவும் இரக்கமுள்ள தாயே, உமது அடைக்கலமாக ஓடிவந்து உமது உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியை கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபொழுதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே தயையுள்ள தாயே இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறோம். பெருமூச்செறிந்து அழும் பாவியாகிய நாங்கள் உமது சமூகத்திலே நிற்கிறோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தாயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். ஆமென்.
வாழ்த்து
அன்னையே என்றோம் அரவணைத்தாய்!
தாயே என்றோம் தாங்கி நின்றாய்!
மரியே என்றோம் வாழ வைத்தாய்!
அருளே என்றோம் ஆசி பொழிந்தாய்!
ஏழை எளியோரின் கண்ணீர் துடைத்து
எளியோர் வறியோரின் துயர் நீக்கி
மாந்தர் அனைவரின் நோய்களை குணமாக்கி
வங்க கரையோரம் மக்கள் குறை போக்கும்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை
பிறந்த பொன்னாளாம் இந்நாளில்
பக்த பெருமக்கள் அனைவருக்கும்
நல்வாழ்த்துகள் !!!
தாயிருக்க
அவள் துணையிருக்க
நான் தாழ்வதும் இல்லை
வீழ்வதும் இல்லை
மரியே வாழ்க!!!
No comments:
Post a Comment