மீன் தொட்டி

Tuesday, July 6, 2010

அவநம்பிக்கை - அதீதநம்பிக்கை

திருவள்ளுவர் அவர்கள் [

பொருட்பால் - அரசியல்] ஊக்கமுடைமை அதிகாரத்தில் யானையை இருவேறு கோணத்தில் நோக்கியுள்ளார், அதாவது முதல் குறளில் யானையை களிறு என்றும், இக்களிரானது

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் உறுதி தளராமல் இருக்கும் என்று கூறுகிறார். அதேசமயம் இரு குறள் கடந்து யானையை மற்றொரு கோணத்தில் குறுபிடுகிறார், கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.

சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. குறள் - 597

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பது
போல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். குறள் - 599

கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.


ஆகையால் முறையாக பயிற்சிபெற்று செயல்படுகின்றவனுக்கு அதீத
நம்பிக்கை பெற்று அவன் களிறுவைபோல் மிகவும் ஊக்கமுடையவனாக உறுதி தளராமல் எந்த அழிவையும் கண்டு அஞ்சமாட்டான். அதே நேரத்தில் பயிற்சிபெறாத, பக்குவபடாதவனுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு, பருத்த உடம்பு, கூர்மையானக் கொம்புகளை உடைய யானை ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சி நடுங்குவதை போல அஞ்சி நடுக்குவான்.

2 comments:

  1. தலைவா..
    'கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்' குறளில் யானையை எப்படி நோக்கியுள்ளார் பாருங்கள்..
    வள்ளுவனுக்கு நிகர் வள்ளுவனே!

    ReplyDelete
  2. kanddippaagha nokkiruvooom......

    ReplyDelete