மீன் தொட்டி

Thursday, July 1, 2010

திருக்குறள்

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்'.

பொருள் வெளிப்படை. ‘உழுதுண்டு வாழ்கின்றவர்களே வாழ்கின்றவர்கள் ஆவார்கள்.
மற்றவர்கள் பிறரைத் தொழுது வாழ்கின்றவர்கள் ஆகிறார்கள்'.

பரிமேலழகர் உரையைப் பார்ப்போம். ‘யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே தமக்கு உரியராய் வாழ்கின்றவர்; மற்றையரெலாம் பிறரைத் தொழுது அதனால் தாமும் உண்டு அவரைப் பின்செல்கின்றவர்'.

‘தாமும் உண்டு' என்பதில் ‘உம்'மையைக் கவனித்தீர்களா? அதாவது, மற்றவர்களுக்கு உணவளிப்பதுதான் மாந்தர்க்கு முதல் கடமை. எஞ்சியதை உண்பது மனித தர்மம்.

பரிமேலழகர் மேலும் கூறுகிறார்:' தாமும் மக்கட் பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர்பின் செல்பவர் தமக்குரியர் அல்லர் என்பது கருத்து'.

அதாவது, உண்மையான மக்கட் பிறப்பினர் உழுதுண்டு தம் தனிமனிதச் சுதந்திரத்தைப் பேணி வாழ்கின்றவர்கள். மற்றவர்கள், தம் தனிமனிதச் சுதந்திரத்தைப் பேணாமையினால்,. உறுப்பு ஒற்றுமையினால் மக்கட் பிறப்பைச் சார்ந்தவர்கள் என்று கூறலாமேயன்றி, உண்மையான மக்களல்லர்; தமக்குரியரல்லாத அடிமைகள்.

2 comments:

  1. Hi,

    It is nice topic. I always will spend my time to read about thirukural.

    If may want to have this in your blog. A really nice widget
    http://www.agrizlive.com/thirukural/index.php

    ReplyDelete
  2. Thanks a lot...
    any problem in our life has an answer in Thirukkural...
    thanks for your link

    ReplyDelete