மீன் தொட்டி

Tuesday, July 27, 2010

பண்ணையின் அடிப்படை விவசாயமுறை

பண்ணையின் முக்கிய விவசாயமாக நெல் உள்ளது. பண்ணை என்பது எல்லாவகையான பயிர்களையும் வேளாண்மை செய்வதுதான், இருந்தாலும் புவி தட்பவெப்பத்திற்கு ஏற்றவாறு பயிர்களை தேர்வுசெய்து வேளாண்மை செய்வது மிக நன்மை பயக்க கூடியதாக இருக்கும்.இப்பண்ணையில் நெல், கருஞ்சோளம், வரகு, பயறு, எள்ளு, கொள்ளு, உலுந்து, கடலை,சூரியகாந்தி போன்ற பயிர் வகைகளை பிரதான பருவகாலத்திலும், சோளம், பருத்தி, கத்தரி,வெண்டை, தக்காளி, மிளகாய், சீரகம், சோம்பு, முள்ளங்கி, சக்கரைவல்லி கிழங்கு மற்றும் போதுமான மழைபொழிவு இருந்தால் நெல்லும் கோடைகாலத்தில் பயிரிடபடுகின்றன. இதை தவிர கரும்பு அவ்வப்போது பயிரிடபட்டும், தென்னை, எலுமிச்சை, மா, புளி, கொய்யா, பனை நொங்கு, கொடிக்காய்பல்லி, இலந்தபழம் போன்றவைகள் வருடந்தோறும் பண்ணையில் கிடைக்கப்பெறுகின்றன. நெற்பயிர் விவசாயமுறை மட்டும் சற்று வேறுபட்டும், மற்ற பயிர் வகைகள் அனத்தும் கிட்டதட்ட ஒத்தமுறையை கொண்டுள்ளது. உலகில் பலபகுதிகளில் வெவ்வேறு விதமாக நெற்பயிர் விவசாயம் செய்யபட்டு வருகின்றது. ஆகையால் இந்த பண்ணையின் விவசாயமுறையை இங்கே குறிபிடவேண்டிய கட்டாயம் உள்ளது.

பண்ணையின் விவசாய நிலங்கள் பரந்து விரிந்து கிடப்பதால் விவசாய வேலையாட்களும்,நேரமும் அதிகளவில் தேவைபடுகின்றது. இந்த பண்ணையின் பசுமாடுகளை ஏரிலோ அல்லது விவசாய வேலைக்கோ பயன்படுத்த முற்றிலும் தடைசெய்யபட்டுள்ளது. ஆண்டிக்கோன் குளத்து புறகரையில் வீற்று அனைத்தையும் காத்து கொண்டிருக்கும் கருப்பசுவாமி திருக்கோயிலுக்கு காணிக்கையை செலுத்தி சுவாமியின் ஆசியை பெற்றபிறகே எந்த காரியத்தையும் பண்ணையில் செய்யபட்டுவருகின்றது. அதன்படி சுவாமியின் ஆசிபெற்று ஆவணி மாத பருவமழையை அனுசரித்து நாற்றங்காலை [நாத்தாங்கா] காளைமாடுகளை[உழவு மாடுகள்] ஏரில் பூட்டி தரிசு உழவு குறைந்தது இரண்டு ஓட்டு ஓட்டபடுகின்றது. உழவு ஓட்டும்பொழுது "ப்பா ப்பா" என்று வலத்துமாட்டை திருப்பவும், "த்தோ த்தோ" என்று இடத்துமாட்டை திருப்பவும் பண்னையில் ஏரோட்டுபவர்கள் பயன்படுத்துகின்றனர்.அதனையடுத்து எருக்கிழை, கொழிஞ்சி போன்ற காட்டுதழைகளையும், சத்தான குப்பை,சாணஎரு போன்றவைகளையும் இட்டு மீண்டும் இரண்டு ஓட்டு உழவு செய்து, வரப்புகளை நன்கு வெட்டி, தழைகள் அழுகுவதற்காக நீரின் அளவை குறையாதவண்ணம் பராமரிக்கபடுகின்றது. கடைசியாக இரண்டு ஓட்டு, தேவையென்றால் மேலும், உழவு செய்துபரம்புபலகை கொண்டு அனுபவமிக்கவர்களால் பரம்பு அடித்து நாற்றங்காலை சமபடுத்த படுகின்றது. அதநேரத்தில் பரம்பில் சீந்திகட்டி தேவையான சிறுவாய்கால்கள் நாற்றங்காலில் இடபடுகின்றது. இயந்திர உழவு நாற்றங்காலில் பயன்படுத்த தடையிருப்பதால் அனைத்து வேலைகளும் மாடுகளினால் மட்டுமே செய்ய படவேண்டும். பரம்பு அடித்த அதேநாள் தேவையான விதைநெல்லை நன்கு வெயிலில் காயவைத்து சிறு அளவாக நார்கோணியில் பிடித்து குளத்து நீரில் மூழ்கடிக்கபடுகிறது. தாமத மழையால் குளத்தில் தண்ணீர் இல்லாத காலங்களில் நல்ல கிணற்று நீரில் விதைநெல்லை வைக்கப்படும். பின்னர் ஒருநாள் கழித்து நீரிலிருந்து வெளியில் ஏறக்கட்டி ஈரம் காயாதவண்ணம் பர்த்து கொள்ளப் படுகினறது. அதற்குஅடுத்த நாள் நெல் நன்றாக பருவமடைந்திருந்தால் நாற்றங்காலில் போதுமான அளவு நீர்விட்டு நெல்லை பாவுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகினறது. பருவம் செய்த விதை நெல்லை எடுத்து சென்று நாற்றங்காளின் வரப்புகளில் வைத்து மிக சீரான ஒரே அளவாக நெல் பாவபடுகின்றது. பொதுவாக நெல் பாவும் வேலை மாலை பொழுதிலே நடைபெறுகின்றது.ஒருநாள் அப்படியே விட்டு, இரண்டாம் நாள் அதிகாலை கோழிகூவும் நேரத்தில் கங்கல் [நெல் பாவும்பொழுது விட்டநீர்] வெட்டபட்டு ஒருதுளி நீர் இல்லாது சீந்தியின் சிறுவாய்க்கால் மூலம் நாற்றங்காளில் இருந்து வடிக்கபடவேண்டும் இதனால் முளைத்துவரும் நெல் துளிருக்கு சூரியஒளிபட்டு பச்சையம் கிடைக்க வழிவகுக்கவும், அதிக நீரின் காரணமாக நெல் அழுகிவிடாமல் இருக்கவும் உதவிபுரிகிறது. இருபினும் நாற்றங்கால் சேற்றை காயாதவாறு நீர்விட்டு பேணுதல் வேண்டும். இவ்வாறு நாற்றங்காலில் பயிர் விவசாயம் செய்யபடுகின்றது.



அதனையடுத்து பயிரின் அளவை பொருத்து வயல்களை நீர்விட்டு இயந்திரத்தாலோ அல்லது ஏரிலோ தரிசு உழவு குறைந்தது இரண்டு ஓட்டு ஓட்டபட்டு பூவரசு, வாதமடக்கி, வேம்பு போன்ற மரத்தழைகளை வயல்களிலிட்டு மீண்டும் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு ஓட்டு உழவு செய்து தழைகளை சேற்றில் அமுக்கபடுகின்றது. தழைகளையும் வயல் சேற்றையும் காயாமலிருக்க தேவையான தண்ணீர் விடபடுகின்றது. அதைதொடர்ந்து வரப்பு வெட்டும் வேலையும் முடிக்கப்படுகின்றது. வயல் வரப்பு வெட்டுக்கு இன்றும் தெய்வதிரு. கருப்பனே முதல் தரவரிசை பட்டியலில் இருகின்றார். வயல்களை பண்ணையாட்க்களின் அளவையும் பயிர் கட்டுகளின் அளவையும் கொண்டு நடவுக்கு தொழி உழவு செய்யபட்டு, மேலும் தொழியின் கூழ்மத்தை அதிகரிப்பதற்காக சேற்சுழற்றி [பட்லர்] கொண்டு இரண்டு ஓட்டு ஓட்டபடுகின்றது. தொழியில் நடவுக்கு முன்பு சீரான அடியுரம் [டிஏபி] இடபடுகிறது. அதனையடுத்து நாற்றங்கால் நெற்பயிர்களை பிடுங்கி அதை சிறுசிறு கத்தையாக [பயிர் முடி, நூறு முடிகள் கொண்டது ஒரு கட்டு பயிர் ஆகும்] கட்ட வேண்டும். அதை கட்டுவதற்கு வைக்கோல் தழுக்கு பயன்படுத்தபடுகின்றது. பயிர்முடிகளை ஆட்கள் மூலமாகவோ அல்லது மாட்டுவண்டியிலோ கொண்டு சென்று பயிர் நடவு வயல்களில் சீரான இடைவெளியில் பயிர் முடிகளை விளம்பவேண்டும். பொம்பளையாட்கள் தொழிவயலில் நேர்ந்து பிடித்து, வேலைக் களைபிலிருந்து மீள பல நாட்டுபுற பாடல்களை பாடி பயிர் நடவு செய்யபடுகின்றது. இந்த நடவிற்கு இளநடவு என்று பெயர். இளநடவு சற்று வேர்பிடித்து வளரும் வரை மிதமான அளவே தண்ணீர் பாய்ச்சபட்டு வருகின்றது. இளம் பயிர்ருக்கு தண்ணீர் அதிகமாக இருந்தால் சூரியஒளி இல்லாது வேர் பிடிக்க இயலாது அழுகி விடும். நெற்பயிர்கள் பச்சையிட்டு நன்றாக வளர தண்ணீரின் அளவை குறையாது பேணப்படுகின்றது. பயிரின் காலத்தை பொறுத்து பலகட்டங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கபட்டு, பயிரின் தேவைகேற்ப இரசாயண உரங்களை [யூரியா, பொட்டாஷ்யம், டிஏபி] சரியான விகிதமுறையில் கலந்து இடப்படுகின்றன. நெற்பயிர்களை பாதித்து இடையிடையே வளர்ந்துவரும் நெத்துவரை மற்றும் அதை போன்ற களைகளை எடுத்தெறியபடுகிறது. நெற்பயிர்கள் பூக்களுடன் கூடிய பூட்டுகளை விட ஆரம்பிகின்றன [பூட்டு என்பது நெற்குலையின் இளம்பருவம்]. இந்த தருணத்தில் நெல்லின் வாய் காலை பொழுதில் திறந்து சூரிய ஒளிமூலம் நெற்பாலை உற்பத்தி செய்து இரவு நேரத்தில் மூடப்பட்டு காணப்படும் ஆகையால் இந்த நேரத்தில் மழைபெய்வது உகந்ததில்லை. நெல்மணிகள் திடவூட்டமாக இருக்க மணிசத்தான சாம்பல் சத்து அல்லது இராசாயண உரம் பொட்டாஷ்யம் அதிக விகிதத்தில் இடப்படுகின்றன. நெல்மணிகள் பழுப்பு நிறம் வர ஆரம்பித்து பின்னர் அறுவடைக்கு ஆயத்தமாக இருக்கும். பண்ணையாட்கள் கறுக்கருவால் கொண்டு நெற்கதிர்களை அறுத்து அரிகாய்சலாக வயலில் ஓரிரு நாட்கள் விடபடுகின்றது. அறுவடைக்கு தயாராய் இருக்கும் கதிரை தாள் என்றும் கூறபடுகிறது. வயலில் நன்கு காய்ந்த நெற்கதிர் அரிகளை களத்தின் தூரத்தை பொறுத்து கன்னி கத்தையாகவோ அல்லது தலைகட்டாகவோ கட்டபடுகின்றது. கன்னிகத்தைகளை வண்டிகள் மூலமாகவும், தலைகட்டுகளை வேலையாட்கள் மூலமாகவும் எடுத்து சென்று களத்திலிட மிக ஏதுவாக இருக்கும். கட்டுகளை தலைகட்டுகளாகவோ அல்லது மாட்டு வண்டியிலோ அல்லது இழுவுந்திலோ [டிராக்டர்] ஏற்றி களத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

பழங்காலதில் நெற்கதிரை தலையடியாக [ஆட்கள் மூலமாக] அடித்து தழுக்கை [கசங்காத வைக்கோல்] பொழியிலிட்டு புணையல் விடப்படும் [மாடுகளை புணைந்து மிதிக்க விடப்படுவதற்கு புணையல் என்றும் வட்டமாக தழுக்கை இடுவதற்கு பொழி என்றும் பெயர்வழக்கத்தில் உள்ளது]. புணையலை நிறுத்தி பொழியை அலசி வைக்கோலை நன்கு வெயிலில் உணர்த்தி பின்னர் அவ்வைக்கோலை போரிட்டு மாட்டு தீவனத்திற்காக பாதுகாக்கபடுகின்றது. வைக்கோலுக்கு வக்கை, கூலம் போன்ற பெயர்களிலும் இப்பண்ணையில் அழைக்கபடுகின்றன. தழுக்கிலிருந்து கிடைத்த பொட்டுகளை தூற்றி நெல்லுகளை பிரித்து எடுக்கபடுகிறது. நெல்லும் வைக்கோல்துகள்களும் கலந்த கலவையை பொட்டு எனபர். விவசாய துறையின் வளர்ச்சிகேற்ப நவீன இயந்திரங்கள் தற்பொழுது பயன்படுத்த படுகின்றன. நெற்கதிர் கட்டுகளை பிரித்து அரியரியாக கதிர் அடிக்கும் இயந்திரத்தில் விட்டு வைக்கோல், நெல், பதர், பொட்டு போன்றவைகளை அதிகபளு கொண்ட பற்சக்கர உருளை மற்றும் உயரழுத்த காற்றாடிகள் மூலமாக தனித் தனியாக ஒரே தருணத்தில் பிரித்தெடுக்கப்படுகின்றது. நெற்கதிர் அறிகள் கதிர் அடிக்கும் இயந்திரத்தின் ஒருபுரம் அதிவேகத்தில் உட்செலுத்தி அதே வேகத்தில் மறுபுரம் வைக்கோல் வெளி கொணரபடுவதால் அதிக வேலையாட்கள் ஒரே நேரத்தில் தேவைபடுகிறது. இதில் வைக்கோல் பிரிவு மக்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சமில்லை அவ்வளவு கடுமையான வேலையாகும். இதற்காக இருமடங்கு ஆட்களை அப்பிரிவில் நியமிக்கப்பட்டு வேலைபழுவை பகிர்ந்தளித்து உடனடியாக வைக்கோலை போருக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கோல்போர் அமைக்க படுகின்றது. ஆக கதிர் அடிக்கும் இயந்திரம் மூலம் வேலை மிக எளிதில் முடிவடைவது குறிப்பிடத்தக்கது. இதற்கும் ஒருபடி உயர்ந்து கதிரை அறுத்து வயலிலேயே அடிக்கும் இயந்திரத்திரமும் அண்மைகாலமாக பண்ணையில் பயன்படுத்த படுகின்றது. இதில் வைக்கோல் மேலாண்மை சற்று சிரமம்மாக கருதப்படுகின்றது, வைக்கோலானது சரிவர களத்தை வந்தடைவதில்லை. மற்றபடி இவ்வேலையிலில் உள்ள எளிமையை எதிலும் காண இயலாது ஆனால் இந்த கதிர் அறுக்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு வயலின் தன்மை நன்கு காய்ந்து இருத்தல் நெற்தாள் சாயாதிருத்தல் போன்ற பல நிபந்தனைகளும் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறு நெற்பயிர் விவசாயம் பண்ணையில் செய்யபடுகின்றது.

பருத்தி, கடலை, சோளம், கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கருஞ்சோளம், வரகு, பயறு, எள்ளு, கொள்ளு, உலுந்து, சூரியகாந்தி, கரும்பு, சீரகம், சோம்பு, முள்ளங்கி, சக்கரைவல்லி கிழங்கு போன்ற மற்ற விவசாய பயிர்களுக்கும் அவற்றின் தன்மைகேற்ப ஒருபுடி புழுதி கால்புடி அளவிற்கு உழவு செய்து நீர் பாய்ச்சலுக்கு ஏற்றவாறு பார்களையும் பாத்திகளையும் அமைத்து பயிராக நடவு செய்தோ அல்லது விதைகளாக விதைத்தோ விவசாய மேற்கொள்ளப்படுகின்றது. செழித்த மழை கலாங்களில் மானாவாரியாக விதைகளை விதைத்து இரண்டு அல்லது மூன்று ஓட்டு உழவு செய்து விவசாயம் செய்யபடுகின்றது. மானாவாரி விவசாயமென்பது பயிருக்கு தேவையான நீர் வான்மழை மூலமாகவே கிடைக்க பெறுவதாகும், மழை பொய்த்து, மனித முயற்சியும் பொய்த்துப்போனால் விவசாயம் கண்டிப்பாக வீடுவந்து சேராது. இந்த அடிப்படை விவசாயமுறையை பண்ணைமட்டுமல்லாது இச்சுற்று வட்டாரமக்களும் இதேமுறையைத்தான் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றார்கள். பண்ணையில் பிறந்த மற்றும் புகுந்த அனைவரும் உழவுதொழிலில் நன்கு கைதேர்ந்தவர்கள் ஆவார்கள். எந்தவித பாகுபாடின்றி அனைவரும் தங்களின் முழு உழைப்பையும் ஒத்துழைப்பையும் பண்ணைக்கு அர்பணித்து பெருமையை சேர்த்து கொண்டவர்கள்தான்.

பொறியாளர் கிருஷ்ணன் அவர்களின் மோழியின் ஆழம் என்ற நூலில் இருந்து ஒரு பகுதியான பண்ணையின் டிப்படை விவசாயம் முறை உங்களுக்காக.......

Monday, July 26, 2010

ஜம்ஷீத் மற்றும் ருக்ஷ்னா திருமண வாழ்த்து



அருளாளன் அன்புடையோன்
அல்லாஹ்வின் பேரரருளால்
பெருமானார் நாயகத்தின்
பெருவாழ்த்தால்

பெற்றவர்கள் மகிழ்ந்திருக்க
சுற்றத்தார் சூழ்ந்திருக்க
மற்றவர்கள் மனதுக்குள் வாழ்த்தி நிற்க
நீங்கள் வாழ்ந்திடுங்கள்..!

இன்பம் இணைந்திருக்க
இனிமை செழித்திருக்க
இல்லறம் அமைத்து
நீங்கள் வாழ்ந்திடுங்கள்

சொந்தங்கள் கூடி நின்று வாழ்த்தட்டும்
பந்தங்கள் நாங்களும் மகிழ்வுடன்
வாழ்த்துகின்றோம்..............
நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திடுங்கள்!!!


-------------------------------------------------

அல்லாஹ் உமக்கு பரக்கத் செய்வானாக!
மேலும் உம்மீது பேரருள் புரிவானாக!!
மணமக்களாகிய உங்கள் இருவரையும்!!!
நன்மையின்பால் ஒன்று சேர்த்து வைப்பானாக!!!!!

பஹ்ரைனிலிருந்து நண்பன்
கிருஷ்ணன் இரா

மதராசப்பட்டிணம் - மேகமே ஓ மேகமே

மேகமே ஓ மேகமே
உன் மழையை கொஞ்சம் தூவாதே
மாலையில் அந்தி மாலையில்
உன்னை மறுபடி அழைப்போம் போகாதே
(மேகமே..)

பக்கிங்ஹாம் கால்வாயில் தண்ணீரா நம் கோயில்
அந்நாடும் வெளுத்துக்கட்டி வாழ்வோம்
அட ஹோய்யா தள்ளிப்போய்யா
வெயில் போகும் முன்னே வேலை செய்வோம் வாய்யா
(மேகம்..)

சூரியன் உதிக்கும் போதே சாயம் போட போவோம்
அட்டுனு மழைத்துளி வந்தா
நாங்க தாயம் ஆடத்தான் போவோம்

வாடா வாடா வாடா தாயம் ஆறு
வாடா வாடா வாடா ஒரே ஒரு தாயம், ஈறாறு
வாடா வாடா வாடா ஒரே ஒரு புள்ளி ச்சே

நாங்க நொண்டி கழுதைப்போல
நூறு மூட்டைப்போல வாழ்க்கை வருத்தும் போது
நாங்க வானம் தேடித்தான் போவோம்

சலவைக்காரன் வாழ்க்கைக்கூட சாமியைப்போலத்தான்
உங்களோட பாவம் மூட்டை சொமப்போம்
அழுக்கோட வாழ்ந்தாலும் நம் நெஞ்சில அழுக்கில்ல
ஆகாசம் போல மனசு வெள்ளை
அட ஹோய்யா தள்ளிப்போய்யா
வெயில் போகும் முன்னே
வேலை செய்வோம் வாய்யா
ஆ வாய்யா

கையில காசு இல்ல
மனசுல வேஷம் இல்ல
பொய்யில வாழ்க்கையே இல்ல
அதனால கஷ்டம் நஷ்டம்தான் இல்ல
ஏ சார் துரை
உன் சட்டை கரை
என் கிட்ட வர
உட்டேன் பார் அறை

பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு ஒதுங்கினது இல்ல
அனுபவம் பாடம் படிச்சோம்
அதனால் வாழ்வில் தோல்வி இல்லை

எம்டிப்போட்ட உண்டைப்போல வருமே சில நேரம்
பதுங்கிப்பாஞ்சி அடிக்கும் போதும் பயமில்ல
வயசாகிப்போனாலும் தன்மானம் சாயாது
மண்ணோட ஈரம் போல வாழ்வோம்
அடப்போய்யா தள்ளிப்போய்யா
வெயில் போகும் முன்னே
வேலை செய்வோம் வாய்யா
வாய்யா..
(மேகமே..)

வாம்மா துரையம்மா

வாம்மா துரையம்மா
Come on white lady
இது வங்கக் கரையம்மா
what? பாடுறாராம் singing
வாம்மா துரையம்மா இது வங்கக் கரையம்மா
வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
We welcome with vanakkam
Ho வணக்கம்
ஹ ஹ ஹ அதேதான்

கட்டவண்டியில் போவோம்
ட்ராமில் ஏறியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா
Snake dance
பெரிய யானைத் தும்பிக்கை ஆசீர்வாதங்கள் எம்மா
Elephant hands
கோடி அதிசயம் இங்கே எம்மாம்மா
(வாம்மா..)

ஓ பாவைக்கூத்துகள் பொம்மலாட்டங்கள்
கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்
இன்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே
பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்
What's this
ehm.. Food for குருவிஸ்

கோடி ஜாதிகள் இங்கே உள்ளபோதிலும்
அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம்
All brothers and sisters but parents difference
வீட்டில் திண்ணைகளும் வைத்துக்கட்டுவோம் எம்மா
வழிப்போக்கன் வந்ததான் தங்கிச்செல்லுவான் சும்மா
Free houses
தாயும் தெய்வம்தான் இங்கே அம்மம்மா
Lovely..
(வாம்மா..)

ஓ கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும்
செந்தமிழ் எங்கள் மொழியாகும்
அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன
வாழ்க்கை எங்கள் நெறியாகும்
Who is that?
யாருன்னு சொன்னால் புரியுமா?
Old poets written gold words
இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்
இங்கு மட்டுமே அன்பைக்காணலாம்
Love you
I beg your pardon
No no london's love.. தப்பிச்சேன்ப்பா
வீர மன்னர்கள் வாழ்ந்த நாடிது எம்மா
இதை அடிமையாக்கித்தான் கொடுமை செய்வது நியாயமா
ஏ.. சும்மா இருப்பா என் பொழப்பை கெடுத்திராத..
மலையும் மலையும் விழுந்தது எம்மம்மா
ஆமா ஆமா
(வாம்மா..)

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூறு [192] இயற்றியவர்: கணியன் பூங்குன்றன்

நண்பர் தினேஷின் வேண்டுகோள்ளுக்கிணங்க இப்பதிவில் இடப்பட்டுள்ளது.

Friday, July 16, 2010

Thursday, July 15, 2010

வேளாண்மைக்கொடி, கீழப்பட்டி



கீழப்பட்டி பெரிய பண்ணையின் வேளாண்மைக்கொடி ©
நிறுவப்பட்ட ஆண்டு 2010.

கொடியின் குறிப்பு: கபில நிறம் மண்ணின் வளத்தையும், ஊதா நிறம் நீரின் வளத்தையும், பச்சை நிறம் விவசாயத்தின் வளமையையும், அதில் வளர்ந்து வரும் இளம்பயிர் எதிர்கால இந்திய நாட்டின் வேளாண்மை பற்றாக்குறையை நிறைவு செய்வதாகவும் இந்த கொடி வடிவமைக்கப்பட்டது. இக்கொடியின் அகல அளவிலிருந்து1.618 ஐ பெருக்கி வரும் தொகையை நீள அளவுகளாக கொள்ளவேண்டும். அகலத்தை மூன்று 1.618 பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியை ஊதா நிறத்திற்கும், இரு பகுதியை பச்சை நிறத்திற்கும், கபில நிறத்திற்கு ஊதா நிற அளவைவே இடபுறம் செங்குத்தாக கொள்ள வேண்டும். தன் தாய் தமிழ் மொழியிலும், உலகம் பின்பற்ற ஆங்கில மொழியிலும் ஆக இரு மொழிகளில் வடிவமைக்கபட்டுள்ளது. கொடி நிறுவப்பட்ட ஆண்டு 2010.

பெயர் காரணம்: சரபோகி [சக்தி ரவி போஸ் கிட்டு ஆகியவர்களை 4132 என்ற முறைப்படி] இப்பெயர் உருவாக்கப்பட்டது.

Wednesday, July 7, 2010

Heat stress


Heat stress is the buildup of heat generated by the muscles in the body during work and of heat coming from warm and hot environment. Heat exhaustion and heat stroke result when the body is subjected to more heat than it can cope with.

When the body becomes overheated, less blood goes to the active muscles, the brain, and other internal organs. Workers get weaker, become tired sooner, and may be less alert, less able to use good judgment, and less able to do their jobs well.

As strain from heat becomes more severe, there can be a rapid rise in body temperature and heart rate. Workers may not realize that this is happening because there is no pain. Mental performance can be affected with an increase in body temperature of 2oF above normal. An increase of 5oF can result in serious illness or death.

The most serious illness is heat stroke. Its effects can include confusion, irrational behavior, convulsions, coma, and even death. Heat stroke can make survivors very sensitive to heat for months and cause varying degrees of brain and Alertness and mental capacity may also be affected. Employees who perform delicate or detailed work may find their accuracy suffering. Other workers may suffer lowered comprehension and retention of information.

One of the most basic but effective ways to stop heat stress disorders is to practice “preventive behavior” on the job.

The following are some practices that can be implemented in most hot work environments.

  • Drink water. Increase water/fluid intake to replace body fluid lost through perspiration. Caution: in extreme heat, thirst is not a reliable guide to the body’s need for water.
  • Eat lightly. Avoid heavy meals and foods that are hard to digest.
  • Avoid alcohol. Alcohol causes dehydration.
  • Rest often. Give the body a chance to cool off.
  • Plan ahead. Perform work activities during cooler periods of the day.
  • Minimize activity in hot areas. Slow down the work place.
  • Reduce the number and duration of exposures.
  • Wear proper clothing. Heat reflective or light colored clothes, material that “breathes,” and even certain personal protective equipment, such as ice vests, can help workers combat heat stress.


Chill out.... Avoid heat stress

Tuesday, July 6, 2010

அவநம்பிக்கை - அதீதநம்பிக்கை

திருவள்ளுவர் அவர்கள் [

பொருட்பால் - அரசியல்] ஊக்கமுடைமை அதிகாரத்தில் யானையை இருவேறு கோணத்தில் நோக்கியுள்ளார், அதாவது முதல் குறளில் யானையை களிறு என்றும், இக்களிரானது

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் உறுதி தளராமல் இருக்கும் என்று கூறுகிறார். அதேசமயம் இரு குறள் கடந்து யானையை மற்றொரு கோணத்தில் குறுபிடுகிறார், கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.

சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. குறள் - 597

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பது
போல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். குறள் - 599

கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.


ஆகையால் முறையாக பயிற்சிபெற்று செயல்படுகின்றவனுக்கு அதீத
நம்பிக்கை பெற்று அவன் களிறுவைபோல் மிகவும் ஊக்கமுடையவனாக உறுதி தளராமல் எந்த அழிவையும் கண்டு அஞ்சமாட்டான். அதே நேரத்தில் பயிற்சிபெறாத, பக்குவபடாதவனுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு, பருத்த உடம்பு, கூர்மையானக் கொம்புகளை உடைய யானை ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சி நடுங்குவதை போல அஞ்சி நடுக்குவான்.