திரு. கண்ணன் ஐயர் அவர்கள் (புகைபட நாள்: 10/06/2005) |
இவர் காளப்பனூர் மற்றும் அந்த பகுதியை சார்ந்த மக்களுக்காக ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. இவர் கொடும்பாளூர் ஊராட்சி தலைவராக 2006 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை பணியாற்றி எண்ணற்ற திட்டப்பணிகளை உருவாக்கி அதனை செம்மையாக மக்களுக்காக செயல்படுத்தினார். காலம் உள்ளவரை இப்பணிகள் இவரது பெயரை போற்றிக்கொண்டுதான் இருக்கும்.
இவர் மக்களோடு மக்களாக நின்று, தனக்கென்று எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது, தன்மக்களுக்காகவே பணியாற்றும் முறை ஒரு மகத்தான முறையாகும். இப்பகுதி மக்கள் இவரை இழந்திருந்தாலும், இவரது மக்கள் பணியால் என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். கீழப்பட்டி இவரது ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டிக்கொள்கின்றது.
இவர் விட்டு சென்ற மக்கள் பணிகள் தொடர்ந்து இம்மக்களுக்காக நடைபெற, ஊராட்சி மன்றமும், மக்களும் தொடர்ந்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பப்படுகின்றது.
No comments:
Post a Comment