திரு. அடைக்கன் அவர்கள் (புகைப்பட நாள்: 10/06/2005) |
இயந்திரவியல் மற்றும் மின்னியல் துறையில் அவரது பங்களிப்பு இந்த பகுதி மக்களுக்கு மிக மிக அதிகம். . ஒரு காலகட்டதில் கமலைகள் (மாடுகள் கொண்டு நீர் இரைக்கும் முறை) மறைந்து, விசை பம்புகள் வந்த காலகட்டதில் பாமர விவசாய மக்களுக்கு இவரது தொண்டு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இவர் ஆண்டிக்கோன் குளக்கரையில் அமைந்துள்ள கருப்பகோயில் பூசாரியாகவும் தன்பணியை செவ்வனே செய்து வந்தார்.
இவரது இழப்பு மாபெரும் இழப்பு என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. இவரை பிரிந்து வாடும் இவரது குடும்பத்திற்கு எமது ஆதரவும், அரவணைப்பும் என்றென்றும் உண்டு. இவரது ஆத்மா சாந்தி அடைய கீழப்பட்டி மக்களின் சார்பாகவும், பண்னையின் சார்பாகவும் இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment