மீன் தொட்டி

Sunday, October 31, 2010

உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்

உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே கண்மணியே அழுவதேன் கண்மணியே
வழித்துணை நான் இருக்க
(உனக்கென..)

கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்
கண்மணி காதலில் நெஞ்சம்தான் தாங்கிடுமா
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்
என்று தான் வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா
மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும்
நம் காதல் தடைகளை தாண்டும்
வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கையில்லை
வரும் காலம் காயம் ஆற்றும் நிலவொளியே மற்றும் அன்றி
இலை எல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளி கொடுக்கும்

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே
இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்
தோளிலே நீயுமே சாயும் போது
எதிர் வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்
வெந்நீரில் நீ குளிக்க விறகாக தீ குளிப்பேன்
உதிரத்தில் உன்னில் கலப்பேன்
விழி மூடும் போது உன்னை பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்
நான் என்றால் நானே இல்லை
நீதானே நானே ஆனாய்
நிழலாகத்தான் துடிப்பேன்
(உனக்கென..)

4 comments:

  1. வணக்கம் நண்பரே!
    உங்களது வளைதளம் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி!
    என் பெயர் ஆனந்தராஜ்.
    நான் எனது நண்பர்கள் 4 பேர் இளநிலை விவசாயம் முடித்து விட்டு இயற்கை விவசாயம் செய்து வருகின்றோம். உங்களுக்கு விவசாய தொடர்பாக எல்லா உதவிகளும் செய்ய நாங்கள் இருக்கிறோம்.
    தொடர்புக்கு::
    9487269907
    mail; organicananth@gmail.com
    web; www.organicananth.blogspot.com

    ’’ஒன்று படுவோம்! உயர்வோம்!
    உயர்த்துவோம்!’’

    ReplyDelete
  2. "நான் என்றால் நானே இல்லை
    நீதானே நானே ஆனாய்..
    அருமையான வரிகள்

    ReplyDelete
  3. நன்றி டாக்ட்ர், எனக்கும் இந்த வரிகள் அனைத்தும் பிடித்தது.....

    ReplyDelete
  4. அழ‌கான‌ வ‌ரிகள்!

    ReplyDelete