மீன் தொட்டி

Friday, November 2, 2012

பண்ணை விவசாயம் 2012

நாற்றாங்காலில் பொன்னி நெற்பயிர் நடவுக்கு ஆயத்தநிலையில் உள்ளது

இந்த வருடத்திற்க்கான முதல் கட்ட பொன்னி நெற்ப்பயிர் நடவு 10/10/2012 அன்று பண்ணையில் முற்றுப்பெற்றது. அடுத்த கட்ட நடவு மிக விரைவில் தொடங்கப்பெற்று அதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டு 28/10/2012 அன்று முற்றுப்பெற்றது. 

போதிய மழைநீர் ஆதாரம் இல்லாமல் கிணற்று பாசனம் கொண்டே இந்தாண்டு நடவு பணிகள் நடைபெற்றது. இதற்க்கிடையில் கடந்த ஒரு வார காலமாக "நிலம்" புயல் வங்க கடலில் உருவாகி போதுமான மழை பொழிவை பெற்று பண்ணை விவசாயம் ஓரளவு புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

Thursday, November 1, 2012

கீழப்பட்டி வருந்துகிறது!!!

திரு. அடைக்கன் அவர்கள்
(புகைப்பட நாள்: 10/06/2005)
திரு. அடைக்கன் பூசாரி அவர்கள் 13/10/2012 - சனிக்கிழமை அன்று காலை அவரது வீட்டிலிருந்து களத்துக்கு செல்லும் போது ஆற்றை கடந்த சில அடி தூரத்திலே மயங்கி கீழே விழுந்துவிட்டார், அதைதொடர்ந்து அவரது காதில் குருதி கசிவும் ஏற்ப்பட்டது. பின்னர் உடனடியாக வீட்டுக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்துவிட்டது. 

இயந்திரவியல் மற்றும் மின்னியல் துறையில் அவரது பங்களிப்பு இந்த பகுதி மக்களுக்கு மிக மிக அதிகம். . ஒரு காலகட்டதில் கமலைகள் (மாடுகள் கொண்டு நீர் இரைக்கும் முறை) மறைந்து, விசை பம்புகள் வந்த காலகட்டதில் பாமர விவசாய மக்களுக்கு இவரது தொண்டு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இவர் ஆண்டிக்கோன் குளக்கரையில் அமைந்துள்ள கருப்பகோயில் பூசாரியாகவும் தன்பணியை செவ்வனே செய்து வந்தார். 

இவரது இழப்பு மாபெரும் இழப்பு என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. இவரை பிரிந்து வாடும் இவரது குடும்பத்திற்கு எமது ஆதரவும், அரவணைப்பும் என்றென்றும் உண்டு. இவரது ஆத்மா சாந்தி அடைய கீழப்பட்டி மக்களின் சார்பாகவும், பண்னையின்  சார்பாகவும் இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.

கீழப்பட்டி வருந்துகிறது!!!

திரு. கண்ணன் ஐயர் அவர்கள்
(புகைபட நாள்: 10/06/2005)
திரு. கண்ணன் ஐயர் அவர்கள் 11/09/2012 - செவ்வாய்கிழமை அன்று காலை அவரது வீட்டில்  உயிர் பிரிந்தது. நெடுநாட்களாக உடல் நிலைகுன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இவர் காளப்பனூர் மற்றும் அந்த பகுதியை சார்ந்த மக்களுக்காக ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. இவர் கொடும்பாளூர் ஊராட்சி தலைவராக 2006 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை பணியாற்றி எண்ணற்ற திட்டப்பணிகளை உருவாக்கி அதனை செம்மையாக மக்களுக்காக செயல்படுத்தினார். காலம் உள்ளவரை இப்பணிகள் இவரது பெயரை போற்றிக்கொண்டுதான் இருக்கும்.

இவர் மக்களோடு மக்களாக நின்று, தனக்கென்று எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது, தன்மக்களுக்காகவே பணியாற்றும் முறை ஒரு மகத்தான முறையாகும். இப்பகுதி மக்கள் இவரை இழந்திருந்தாலும், இவரது மக்கள் பணியால் என்றென்றும் மக்களின் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். கீழப்பட்டி இவரது ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டிக்கொள்கின்றது.

இவர் விட்டு சென்ற மக்கள் பணிகள் தொடர்ந்து இம்மக்களுக்காக நடைபெற, ஊராட்சி மன்றமும், மக்களும் தொடர்ந்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பப்படுகின்றது.