மீன் தொட்டி

Wednesday, April 9, 2008

மீன்

"மச்சிலி ஜல் கி ராணி ஹை
ஜீவன் உஸ்கா பாணி ஹை
ஹாத் லகாவோ டர் ஜாயேஹி
பாஹர் நிக்காலோ மர் ஜாயேஹி"

அதாவது

மீனு தண்ணிக்கு ராணி
அதுக்கு உயிரு தண்ணி
கைவச்சா பயந்துபோகும்
வெளியே எடுத்தா செத்துப்போகும்.

Monday, February 25, 2008

தமிழ் தாய் வாழ்த்து

நீராடும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!
அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே! தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
-- மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை


பொருள் :

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில் தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும் பொருத்தமான. பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!

இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!


You can download the audio at http://www.qsl.net/vu2sdu/tamil1.html

Thursday, February 21, 2008

The 90/10 Principle

Author: Stephen Covey

This will change your life. Atleast the way you react to any situation from now on ! Lets pass it along and try to adhere to it shall we?

What is this principle? 10% of life is made up of what happens to you. 90% of life is decided by how you choose to react.

What does this mean? We really have no control over 10% of what happens to us.
We cannot stop the car from breaking down. The plane will be late arriving, whichthrows our whole schedule off. A driver may cut us off in traffic.We have no control over this 10%. The other 90% is different. You determine theother 90%.
How? ……….By your reaction.
You cannot control a red light. but you can control your reaction. Don’t let people foolyou; YOU can control how you react.
Let’s use an example.
You are eating breakfast with your family. Your daughter knocks over a cup of coffeeonto your business shirt. You have no control over what just happened.
What happens next will be determined by how you react.
You curse.
You harshly scold your daughter for knocking the cup over. She breaks down intears. After scolding her, you turn to your spouse and criticize her for placing the cuptoo close to the edge of the table.
A short verbal battle follows. You storm upstairs and change your shirt. Back downstairs, you find your daughter has been too busy crying to finish breakfast and get ready for school. She misses the bus.
Your spouse must leave immediately for work. You rush to the car and drive yourdaughter to school. Because you are late, you drive 40 miles an hour in a 30 mphspeed limit.
After a 15-minute delay and throwing $60 traffic fine away, you arrive at school. Yourdaughter runs into the building without saying goodbye.
After arriving at the office 20 minutes late, you find you forgot your briefcase. Your day has started terrible. As it continues, it seems to get worse and worse.
You look forward to coming home. When you arrive home, you find small wedge in your relationship with your spouse and daughter. Why? …. Because of how you reacted in the morning.
Why did you have a bad day?A) Did the coffee cause it?B) Did your daughter cause it?C) Did the policeman cause it?D) Did you cause it?
The answer is “D”. You had no control over what happened with the coffee. How you reacted in those 5 seconds is what caused your bad day.
Here is what could have and should have happened. Coffee splashes over you. Your daughter is about to cry. You gently say, “Its okhoney, you just need to be more careful next time”.
Grabbing a towel you rush upstairs. After grabbing a new shirt and your briefcase, you come back down in time to look through the window and see your child getting on the bus. She turns and waves.
You arrive 5 minutes early and cheerfully greet the staff. Your boss comments on how good the day you are having.
Notice the difference?
Two different scenarios. Both started the same. Both ended different.Why?
Because of how you REACTED.
You really do not have any control over 10% of what happens. The other 90% wasdetermined by your reaction.
Here are some ways to apply the 90/10 principle.
If someone says something negative about you, don’t be a sponge. Let the attack roll off like water on glass. You don’t have to let the negative comment affect you! React properly and it will not ruin your day. Now you know the 90-10 principle. Apply it and you will be amazed at the results. You will lose nothing if you try it. The 90-10 principle is incredible. It CAN change your life!!!


Enjoy….

Sunday, February 17, 2008

The Salty Coffee.....True Love

He met her on a party, she was so outstanding, manyguys chasing after her,while he was so normal, nobody paid attention to him.

At the end of the party, he invited her to have coffee with him, she was surprised, but due to being polite, she promised.

They sat in a nice coffee shop, he was too nervous to

say anything,
she felt uncomfortable, she thought, please, let me
back home..
suddenly
he asked the waiter: would you please give me somesalt?
I'd like to put it in my coffee.
Everybody stared at him, so strange! His face turnedred, but, still, he put the salt in his coffee and drank it.
She asked him curiously: why you have this hobby?
He replied: when I was a little boy, I was living
near the sea, I liked playing in the sea, I could feel the taste of the sea, salty and bite, just like the taste of the salty coffee. Now every time I have the salty coffee, I always think of my
childhood, think of my hometown, I miss my hometownso much, I miss my parents who are still living there.
While saying that, tears filled his eyes.
She was deeply touched. That's his true feeling, fromthe bottom of his heart. A man who can tell out his homesick, he must be a man who loves home, cares about home, has responsibility of home..

Then she also started to speak, spoke about her faraway hometown, her childhood, her family. That was a really nice talk, also a beautiful beginning of
their story.

They continued to date. She found actually he was a
man who meets all her demands: he had tolerance,
was kind hearted, warm, careful...
he was such a good person but she almost missed him! Thanks to his salty coffee!

Then the story was just like every beautiful lovestory: the princess married to the prince, then they were living the happy life...

And, every time she made coffee for him, she put some salt in the coffee, as she knew that's the way he liked it.

After 40 years, he passed away, left her a letter
which said: My dearest, please forgive me, forgive my whole life
lie. This was the only lie I said to you----the salty coffee. Remember the first time we dated? I was so nervous at that time, actually I wanted some sugar, but I said salt. It was hard for me to change so I just went ahead. I never thought that could be the start of our communication! I tried to
tell you the truth many times in my life, but I was too afraid to do that, as I have promised not to lie to you for anything..
Now I'm dying, I afraid of nothing so I tell you the truth: I don't like the salty coffee, what a strange bad taste..but I have
the salty coffee for my whole life since I knew you, I never feel sorry for anything I do for you. Having you with me is my biggest happiness for my whole life. If I can live for the second time, I still want to know you and have you for my whole life, even though I have to drink the salty coffee again.

Her tears made the letter totally wet.
Someday, someone asked her: what's the taste of saltycoffee?

It's sweet. She replied.

காதல் 02

காதலும் முத்தம் தான்.
காதலிப்பது, கொடுக்கும் முத்தம்
காதலிக்கப்படுவது, வாங்கும் முத்தம்.
காதலிப்பவராலேயே காதலிக்கப்படுவது,
கொடுத்து வாங்கும் இதழ்முத்தம்!

முத்தத்தில் முதல்நிலை அடையவும்,
காதலில் மூன்றாம் நிலை கடந்தும்
நாம் நெடுந்தொலைவில் நிற்கிறோம்.

சற்றுமுன் பிறந்த சிசுவென இருந்த காதல்
குழந்தையென வளர்ந்து
தன் குறும்புகளைத் துவங்குகிறது.

மழலையின் ஆசைகள் நிறைவேற்றும்
தாய்மனமென மாறுகின்றன
நம் இதயங்கள்.

காதல் தனிமையாகிறதாம்.
நாம் சந்தித்துக் கொள்கிறோம்.
காதலும் சேர்ந்து கொள்கிறது.

காதலுக்கு வெயிலடிக்கிறதாம்.
மரநிழலில் அமர்ந்து பேசிக்கொள்கிறோம்.
காதல் குளிர்கிறது.

காதலுக்கு தாகமாம்.
ஒன்றாய் ஐஸ்க்ரீம்கடை செல்கிறோம்.
காதல் தணிகிறது.

காதலுக்கு சோம்பலாம்.
ஒரு மிதிவண்டியில் ஊர்வலம் வருகிறோம்.
காதல் சுறுசுறுப்பாகிறது.

காதலுக்கு குழப்பம்.
விருப்பு, வெறுப்பு பகிர்கிறோம்.
காதல் தெளிகிறது.

காதலுக்கு பயம்.
எதிர்காலம் திட்டமிடுகிறோம்.
காதல் துணிகிறது.

காதல் குறைகிறதாய்த் தோன்றுகிறது.
மீண்டும் முதல் நாளிலிருந்து நேசிக்கத் துவங்குகிறோம்.
காதல் பூரணமாகிறது.

காதல் பூரணமாகையில்மூளை தூங்கிவிடுகிறது.
மனம் விழித்துக் கொள்கிறது.
விழித்த மனம் கவிதையெனப் பிதற்றுகிறது.

‘நிற்கிறாய்’,
‘பார்க்கிறாய்’,
‘புன்னகைக்கிறாய்’,
‘பேசுகிறாய்’,
என்பதையெல்லாம்…
“அழகுகிறாய்” என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுகிறேன்.

கேட்டதும் கலகலவென அழகுகிறாய்.
உன் வீட்டுக்கும்என் வீட்டுக்கும்
கனவுகளில் அகவழிச்சாலை அமைக்கிறேன்.
வந்து வந்து போகிறாய்.
போய் போய் வருகிறாய்.

கணக்கு,இயற்பியல், வேதியியல் என வகுப்பில்
எந்த இயல் நடந்தாலும்
எனக்குள் உன் உயிரியலே நடக்கிறதென்கிறேன்.
நமட்டுச் சிரிப்பில் உதடு சுழித்து இதழியல் நடத்துகிறாய்.

உன்னிடம் ஒப்பிக்க
காதல் சிரத்தையோடு கவிதை புத்தகம் வாசிக்கிறேன்.
நீயோ இயல்பாக கவிதைகளைப் பேசி விட்டுப் போகிறாய்.

என் வீட்டுக் கண்ணாடியில் எனக்கு நீ தெரிகிறாய்.
உன் வீட்டுக் கண்ணாடியில் உனக்கு நான் தெரிகிறேன்.
இதயங்களைப் போல கண்ணாடிகளையும் இடம் மாற்றியிருக்குமோ,
காதல்? – உளறுகிறேன் நான்.

நம் வீட்டுக்கண்ணாடியில் நாம் தெரிவோமென கண்ணடிக்கிறாய்.
நட்சத்திரங்கள் துடைத்து
என் இரவுகளை சுத்தமாக வைத்திருக்கிறேன்.
நிலவென நீ வருகிறாய்.
எங்கிருந்தோ வந்து மொய்க்கத் துவங்குகின்றன நட்சத்திரங்கள்.

கல்விக்கூடமே நம் காதல்
கூடமானதென நகைக்கிறேன்.
கல்வி போல காதலும் கைகூடுமென
நம்பிக்கை நல்குகிறாய்.

இப்படிகணம் தோறும்
கனவுகள் சுமக்கும்
இரண்டு உயிர்களும்
உருகி உருகி
ஒற்றைக் காதலுக்கு
அடங்குகின்றன.

அந்த மரநிழலில்
நம் காதல் குளிர்ந்து கொண்டிருந்த
ஒரு மதியவேளையில்,
நம்மிருவரையும் தலைமையாசிரியர் அழைத்து வரச்சொன்னதாக
உன் தோழி சொல்ல,
நம்மை நாம் பார்த்துக் கொண்டோம்.
நான்கு கண்களிலும் ஒரே பயம்.


தலைமையாசிரியர் அறைக்குள்
பயத்தோடு நகம் கடித்தபடி நீயும்
பயமில்லாமல் முகம் நடித்தபடி நானும் நின்றிருக்க
இயல்பாய்ப் பேசினார் அவர்.…

அருகிலிருக்கும் கான்வெண்ட் பள்ளியொன்றில்
நிகழும் கலாச்சாரப் போட்டிக்கு செல்லும் குழு
நம்முடைய தலைமையில்…

செய்தியைச் சொன்னதும் ஒன்றாய் நிமிர்கிறோம்.
பிறவிவரங்கள் பெற்றுக்கொண்டு
நாம் வெளியேறுகையில்
நம் நெருக்கம் பற்றி அறிந்தவராய்
பரிசுகளோடு நம் பள்ளிப் பெயரும் முக்கியமென
நாசூக்காய் சொல்லி அமர்ந்தார்.

வகுப்பறையுள் நுழையும்போதே
வியர்வையுடன் படபடக்கிறாய்.
தண்ணீர் குடிக்கிறாய்.
‘எதாவது பேசேன்’ என்று
பயத்தில் என்னை அடிக்கிறாய்.

எங்கிருந்தோ நானனுப்பிய
காதல்மேகம் உன்னிடம் வந்து பொழிகிறது
மழையாய்.

நாம் கைகோர்த்து நடந்த
பாதச்சுவடுகளையெல்லாம்
காதல்சுவடுகளாய்ப் பத்திரபடுத்துகிறது
பூமி.

நம் நிழல்களைக் கூட
இணைத்தேப் பார்க்கிறது
வெயில்.

நம்மைச் சுற்றி மட்டும்
காதலுடன் மணக்கிறது
காற்று.

சந்திக்கமுடியாத இரவுகளில்
நம் முகம் பார்த்துக்கொள்ளும்
மாயக்கண்ணாடியென
நிலவைச் சுமந்து நிற்கிறது
வானம்.

இப்படி நம்காதலுடன்
பஞ்ச பூதங்களும் துணையிருக்க
பயமேன்?
ஆற்றுகிறேன் நான்.

இத்தனை செய்பவை பூதங்களா?
இல்லை… இல்லை…
பஞ்ச தெய்வங்களென சிரித்துக் கொள்கிறாய்.

காதல் இன்னும் நெருங்க,
பயம் விலகி
மீண்டும் பழையபடி புதியவளாய் நீ!

ஒரு வெள்ளி மாலையில்
அந்த பள்ளி நோக்கி
நம் பயணம் துவங்குகிறது.

பேருந்தில் ஒரு சன்னலோர இருக்கையில் நீ.
உன்னருகில் இடம்பிடித்து அமர்ந்திருக்கிறது உன் கூச்சம்.
அருகில் நின்றபடி நான்.
தலையில் தட்டி கூச்சத்தை எழுப்பிவிட்டு
தானமர்ந்துகொண்டு எனக்கும் இடமளிக்கிறது காதல்.

பேருந்து நகரத்தொடங்கியதும்
சன்னல் சதுரத்தில் ஓடத் துவங்குகிறது
உலக சினிமா.

இருக்கைகளில் நாமிருக்க…
காணும் காட்சிகளிலெல்லாம்
இறக்கை கட்டுகிறது நம் மனம்.

அந்தப் பள்ளியின்
பசும்புல்தரை காட்சி வந்ததும்
பயணம் முடிகிறது.

அங்குபயமின்றி சிறகடிக்கும்
கான்வெண்ட் காதல்களைப் பார்த்து
நம் காதல் பிரம்மித்து நிற்க,
சட்டை பிடித்து இழுத்துப் போகிறாய் உள்ளரங்குக்கு.

ஓவியப்போட்டி நடக்குமிடத்தை நெருங்குகிறாய்.
நானும் வருகிறேன்.

‘உனக்கும் ஓவியம் வரையத் தெரியுமா?’
ஆச்சர்யமாய் என்னைப் பார்க்கிறாய்.
‘தெரியும். ஆனால் கண்ணாடியில்தான் வரைவேன்’
‘கண்ணாடியிலா?’
‘ம்ம்ம். உலகிலிருக்கும் எல்லாக் கண்ணாடிகளிலும் அதைத்தான் வரைந்து வைத்திருக்கிறேன்’
கேட்டு கேட்டு சலித்தவளாய் முறைத்துவிட்டு
‘கவிதை போட்டி அந்தப்பக்கம்’ என்று அனுப்பி வைக்கிறாய்.

கவிதையெழுதுகையில்
சொற்களுக்கிடையே நீ மறைந்து மறைந்து எட்டிப்பார்த்தது போல
நீ தீட்டிய வண்ணங்களுக்கிடையே நான் வந்திருப்பேனா?
அன்று
நம்மிருவருக்குமே
பரிசு கிடைக்க
எப்படியெல்லாம் வேண்டிக்கொண்டதோ
நம் காதல்.
நமக்குப் பரிசு கொடுத்து
அந்தப் பள்ளியும் காதல்கூடமானது!

அடுத்தவாரம்பரிசு பெற்ற உன் ஓவியமும், என் கவிதையும்
நம் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் அருகருகே.

நீ தீட்டிய ஓவியத்தில்
என் முகத்தையும்,

‘இருளை
அளவெடுக்கும்
பொன்வண்டின்
ரீங்காரத்தில்
இதயம் சிறைபடுதல் போல…’

எனத் துவங்கும் என் கவிதைவரிகளில் உன் பெயரையும்
நாம் ஒளித்து வைத்ததைக் கண்டுகொள்ள
எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்?

நாம் வாங்கி வந்த கோப்பைகள்
மேசையின் மீது கம்பீரமாய்
நம் பிள்ளைகளைப் போல…
மேடையேறி இருவரும்
சான்றிதழ் வாங்குகையில்
திருமணப்பரிசு வாங்க
மனதை உறுதிப்படுத்துகிறது
காதல் களம்.

அதுதான் அந்தப்பள்ளியில்
நாம் இணைந்திருக்கும் கடைசி நாளெனெத் தெரியாமல்
தான்வழக்கத்தைவிட அதிகமாகவே அன்று காதலித்தோமா?

நம் காதலை உன் வீடுவரைக்கும்
யாரோ இழுத்துப் போய்விட
அரையாண்டுக்குள்
அடுத்தப் பள்ளியில் சேர்க்க வேண்டுமென
அவசரமாய் உன்னுடன்
அயலூருக்கு காலியாகிறது உன் குடும்பம்.

நொடிப்பொழுதில்
ஆயுளின் முழு ஆண்டுகளும்
முடிந்துபோனவனாய் நான்.

இசையிழந்த பாடலென பரிதவிப்போடு நீ.
காற்று நின்ற காற்றாடியாய் நம் காதல்.

நினைவுகள் இருக்கும்வரை துயரங்கள் ஏதுமில்லை

காதலை மறுத்தவர்கள், காதலால் மறுக்கப்பட்டவர்கள், ஒரு தலையாய்க் காதலித்து தறுதலையாய்ப் போனவர்கள் இப்படிக் காதலின் எல்லா வகைத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களும், காதலின் வாசனையே நுகராதவர்களும் கூட, (மறுபடியும்) காதலின் சுவாரசியத்தை அனுபவிப்பது நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடையில் தான். அவர்களுக்காக….அலையில் காலை மட்டும் நனைத்துக் கொண்டிருந்த என்னை,ஒரு தெய்வீகமான நேரத்தில்,காதல்கடலில் தள்ளிவிட்டு,கரையில் நின்று வேடிக்கை பார்க்கிறது, வாழ்க்கை.அதில் மூழ்கி முத்தெடுத்தவுடன்,காதலே என்னைமறுபடியும் வாழ்க்கையிடம் துப்பி விடும்என்ற நம்பிக்கையில் நீந்திக் கொண்டு இருக்கிறேன்.உன்னைப் பெண் பார்க்க, என் பெற்றோரோடு
உன் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறேன் நான்.


கண்களை மூடிக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு
உள்ளறையில் ஒளிந்திருக்கிறாய் நீ.


சற்று நேரத்தில், உன் அப்பாவின் கண்ணசைவில்,
உன் அம்மாவின் கையசைவில் உனக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.
அந்த அறையின் வாசலை மறைத்திருந்த திரையை
ஒரு கையால் விலக்கி விட்டு நீ வெளிப்படுகிறாய்.திரையில் படமாய் இருந்த மகாலட்சுமி உயிரோடு எழுந்து வருவதைப் போல மெல்ல வருகிறாய்.


எல்லாக் கண்களுக்கும் உனது பார்வையும், வணக்கமும் சேர்ந்து கிடைக்க
என் கண்களுக்கோ உனது வணக்கம் மட்டுமே கிடைக்கிறது.ஏன் நேராய்ப் பார்க்க வில்லை என்று நான் என் கண்களையும்,
நீ உன் கண்களையும் திட்டிக் கொண்டிருக்கிறோம்.வெட்கம் நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்கிறது.


சற்று நேரத்தில், புது உடையில், தட்டில் சாக்லேட்டோடு
சுற்றி வரும் பிறந்த நாள் குழந்தையைப் போல ,காபி டம்ளர்களோடு நீ வலம் வருகிறாய்.குனிந்து தட்டையேப் பார்த்துக் கொண்டு அதை நீ என்னிடம் நீட்டுகையில்,தட்டில் ஒரு நிலாத் தெரிகிறது எனக்கு.ஒரு நொடி தட்டில் சந்திக்கின்றன நம் கண்கள்.


ஒரு டம்ளரை நான் எடுத்துக் கொண்டவுடன் விலகி ஓரமாய் நிற்கிறாய் நீ.இதேக் காட்சியை என் நிலையில் உன்னையும்,
உன் நிலையில் என்னையும் வைத்து கற்பனை பண்ணிப் பார்க்கிறது மனம்.இருக்கையில் அமர்ந்த படி நீ. காபி டம்ளர்களோடு நான்.
“என்ன தம்பி யோசிக்கிறீங்க” என்ற உன் அப்பாவின் குரலில் திடுக்கிட்ட நான்,சமாளிப்பாக “ இது ஃபில்டர் காஃபியா, இல்ல ப்ரூவான்னு யோசிச்சுட்டு இருக்கேன் “ என்று சொல்ல…“அது பூஸ்ட்ங்க…” என்கிறாய் நீ.


எல்லாரும் சிரிக்க, நான் உன் முகத்தை நேராய்ப்பார்க்கிறேன்.நீயோ உதட்டை மெல்லக் கடித்து, நிலம் நோக்கி நகுகிறாய்.பின் உள்ளறைக்குள் நுழைய முதல் அடி எடுத்துவைக்கிறாய், என் மனதுக்குள்ளும்.

“என்னப்பா.. பொண்ணப் புடிச்சிருக்கா?” என மெல்லக் கேட்கும் அம்மாவிடம்,“பொண்ணுக்கு என்னப் புடிச்சிருந்தா, எனக்கும் சம்மதம்”
என உள்ளறைக்கும் கேட்கும் படி சத்தமாகவே சொல்கிறேன்.அங்கிருந்து ஓடி வந்த உன் தங்கை “உங்கள எங்கக்காவுக்குப் புடிச்சிருக்காம்”
எனக் கத்திவிட்டு மறைகிறாள்.இரண்டே வரிகளில் நிச்சயமாகிறது நமதுத் திருமணம்.


முகத்தில் மலர்ச்சியோடு, “ அப்புறம் நீங்க எவ்வளவு நக எதிர்பாக்கறீங்கன்னு சொன்னா….” என உன் அப்பா ஆரம்பிக்க… என்னைப் பார்க்கிறார் என் அப்பா.
“உங்கப் பொண்ணுதான் நல்லா சிரிக்கிறாங்களே…
அப்புறம் எதுக்குங்க நகையெல்லாம்…நீங்க எதுவும் போட வேண்டாம்…அவங்க வேணும்னு சொன்னா, நான் வாங்கித் தர்றேன்” என்கிறேன் நான்.சந்தேகமாய்ப் பார்க்கிறார் உன் அப்பா.


“வீட்டுக்குத் தேவையான கட்டில், பீரோ, பாத்திரம், பண்டெமெல்லாம்..நாங்க…”
என ஆரம்பிக்கிறார் உன் அம்மா.“உங்கப் பொண்ணுக்கு மத்தவங்கள சந்தோஷப்படுத்தத் தெரியுமில்ல…அது போதும்…அது தானங்க வீட்டுக்கு முக்கியமாத் தேவை…மத்ததெல்லாம் நான் வாங்கிக்கிறேன்” என மறுபடியும் மறுக்கிறேன் நான்.


“என்ன இருந்தாலும் பொண்ணு வீட்டு சீர் வரிசைனு ஒன்னு இருக்கில்லங்க”
என என் அப்பாவைப் பார்த்து உன் தாய்மாமன் சொல்ல…“உங்கப் பொண்ணோட சேர்த்து, அவங்க ஆசையெல்லாத்தையும்
சீராக் கொடுங்க, வரிசையா அத நிறைவேத்துறேன்”
என சொல்லி விட்டு என் பெற்றோரோடு கிளம்புகிறேன்.


வெளியேறி தெருவில் இறங்கி நடக்கும்போது திரும்பி
உன் உள்ளறையின் ஜன்னல் பார்க்கிறேன்.அங்கே எல்லா நகையையும் கழற்றிவிட்டு அழகானப் புன்னகையோடு
என்னைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய் நீ.விழிகளால் பேசி விட்டு சாலையில் நடக்க ஆரம்பிக்கிறேன் நான்.


“உனக்கெல்லாம் காதல்னு ஒன்னு வந்தா,
அது நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் நடுவுலதாண்டா”என கல்லூரியில் நண்பன் கொடுத்த சாபம் ( வரம்? ) பலிக்க ஆரம்பிக்கிறது.
நிமிர்ந்து உலகத்தைப் பார்க்கிறேன் – அது இன்று மட்டும் அழகாய்த் தெரிகிறது.


தனது பெற்றோரின் நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடையில் நடந்தவையெல்லாம் ரசனையோடு பதிவு செய்யப்பட்டிருந்த அந்த டைரியைப் படித்துக் கொண்டிருந்தாள், அடுத்த நாள் தனது இருபத்தியோராவது பிறந்தநாளைகொண்டாட தனது அம்மாச்சி வீட்டுக்கு வந்திருக்கும் தமிழ். ஆனால் அந்த டைரியின் அடுத்தடுத்தப் பக்கங்களைப் புரட்ட புரட்ட எல்லாமே வெறுமையாய் இருந்தன. ஆர்வத்தோடு அந்தப் பழைய அலமாரியை அலசினாள். வேறு டைரிகள் எதுவும் இல்லாவிட்டாலும் ஒரு பழைய ஃபைல் கிடைத்தது. “Ilavarasi – Medical Reports” என்று மேலட்டையில் எழுதப்பட்டிருந்த அந்த ஃபைலை படிக்க ஆரம்பித்தாள். அவளுடைய அம்மா இளவரசியின் கர்ப்ப கால மருத்துவப் பரிசோதனைகளின் விவரம் அடங்கிய ஃபைல் அது.

A SINGLE INTRAUTERINE FETUS OF ABOUT 18 WEEKS SIZE.
HEART PULSATIONS NORMAL. LIQUOR ADEQUATE. NO ANOMALIES.

என்று ஆரம்பித்து, மாதாந்திரப் பரிசோதனைகள், இடையில் எடுக்கப் பட்ட இரண்டு ஸ்கேன், இன்னும் பல விவரங்களோடு போய்க்கொண்டிருந்த அதில் இறுதியாக இருந்தது பிரசவத்தின் குறிப்பு. அதில்DEATH DUE TO POST PARTUM HEMORRHAGE.. என்ற வரியைப் படித்ததும் லேசாக மயக்கம் வருவது போலிருந்தது தமிழுக்கு.முழுவதுமாய்ப் படித்து முடிக்கும்போது கடைசிப் பக்கத்தில் தமிழில் எதோ எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தாள்.

உன் இழப்புஎனக்கு பேரிழப்பல்ல…உயிரிழப்பு!*நீ பிறந்ததில்எனக்கும் மறுஜென்மம். என்று இரண்டு குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. ஒன்று இறந்துபோன தன் அம்மாவைப் பற்றியும், மற்றொன்று அன்று பிறந்த தனக்காகவும், தன் அப்பாவால் எழுதப்பட்டது என்பது அவளுக்குப் புரிந்தது. படித்ததும் அழுகை அழுகையாய் வரக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே “அம்மாச்சி” என்று அலறினாள். “என்ன பாப்பா” கேட்டுக்கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தார் அவளுடைய தாய்வழிப் பாட்டி. “அம்மா எப்படி எறந்தாங்கன்னு உண்மைய சொல்லுங்கம்மாச்சி…”சோகமாய் இருக்கும் பேத்தியைப் பார்த்ததும் கலக்கமானவர், சுதாரித்துக் கொண்டு சொன்னார்.“என்ன பாப்பா இவ்வளவு நாள் கழிச்சு இப்போ திடீர்னு கேட்கற? உங்கிட்ட தான் சொல்லிருக்கேனே நீ ரெண்டு வயசுக் குழந்தையா இருந்தப்ப நாம எல்லாரும் ஊட்டிப் போகும்போது கார் ஆக்சிடெண்ட் ஆகி…”“போதும்ம்மாச்சி எல்லாரும் சேர்ந்து இத்தன வருசமா என்கிட்ட பொய் சொல்லி வச்சது போதும்….ஐயோ இத்தன வருசமும் எங்கம்மா இறந்த நாளன்னைக்கா சந்தோசமா பிறந்தநாள்னு கொண்டாடிட்டு இருந்திருக்கேன்?” சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழ ஆரம்பித்துவிட்டாள்.

அவள் அம்மாச்சிக்கும் கண்ணீர் தானாக வழிய ஆரம்பித்தது. அழுகையின் போது அமைதியாக இருப்பதே உத்தமமென்று அமைதியாக இருந்தார் அவர்.அவளே கேட்டாள் “ஏம்மாச்சி எங்கிட்ட மறச்சாங்க? அப்பாவும் எங்கிட்ட பொய் சொல்லிட்டாங்கல்ல”“இல்லமா எல்லார் மாதிரியும் உன் பிறந்த நாள் அன்னைக்கு நீயும் சந்தோசமா இருக்கனும்னுதான் உங்கப்பா…”“என்னம்மாச்சி…பிறந்தநாளன்னைக்கு நான் மட்டும்தான சந்தோசமா இருப்பேன்… நீங்க எல்லாரும் எப்படி இருந்திருப்பீங்க…ஐயோ என்னோட ஒவ்வொரு பிறந்த நாள் அன்னைக்கும் அப்பாவுக்கு எப்படி இருந்திருக்கும்?” மறுபடியும் அழுதாள்.அவள் அம்மாச்சியோ எதுவும் பேசமுடியாமல் சோகமாய் உட்கார்ந்திருந்தார்.“ஹாஸ்பிடல்ல தான அம்மாச்சி பிரசவமாச்சு…அப்புறம் எப்படி அம்மா எறந்தாங்க?”“என்னத்த சொல்றது, அவ கல்யாணத்துல இருந்து எல்லாமே நல்லாதான் நடந்துச்சு…ரெண்டு பேரும் நல்லாதான் இருந்தாங்க… யார் கண்ணு பட்டுச்சோ… இப்படி அல்பாயுசுலப் போயிட்டா”பேசிக்கொண்டே இருந்ததில் நெடுநாள் பேசாமலிருந்த கதையெல்லாம் ஆரம்பத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்தார்.

“உங்க அம்மாவப் பொண்ணுப் பார்க்க வந்த அன்னைக்கே உங்கப்பா பேசினதுல எங்க எல்லாருக்கும் அவர பிடிச்சுப் போயிடுச்சு… பொண்ணப் பிடிச்சிருக்கானு கேட்டதுக்கும் பொண்ணுக்குப் புடிச்சிருந்தா எனக்கும் சம்மதம்னு உங்கப்பா ஒரே வரியில சொல்லவும் உங்கம்மா அப்பவே புடிச்சிருக்குனு சொல்லிட்டா… அப்புறமென்ன அன்னைக்கே தாம்பூலமும் மாத்தியாச்சு…கல்யாணத் தேதியும் குறிச்சு பத்திரிக்கையும் அடிக்கப் போறப்ப உங்கப்பா வந்து கல்யாணத்த ஒரு வாரம் முன்னாடி வச்சிக்கலாம்னு பிடிவாதம் பிடிக்கிறார்… உங்கம்மாவோட பொறந்தநாளன்னைக்கே கல்யாணத்த வச்சிக்கனும்னு அவர் ஆசப்பட்டதெல்லாம் உங்கம்மா சொன்ன பிற்பாடுதான் எங்களுக்குத் தெரியும்…எல்லாருக்கும் உங்கப்பா மேல ரொம்ப நல்ல அபிப்ராயம் இருந்ததுனாலதான் ஐயரில்லாமத் தாலி கட்றதுக்குகூட உங்க தாத்தா ஒத்துக்கிட்டாங்க”இந்தக் கதையெல்லாம் டைரி ஏற்கனவே அவளுக்கு சொல்லியிருந்தது.

“பொண்ண வெளியூர்ல கட்டிக் கொடுத்தா நாளுங்கெழமையும் போய்ப் பார்க்க செரமமா இருக்கும்னுதான் உள்ளூர்லையேக் கொடுத்தோம்…அப்ப உங்கப்பா வேலைக்கு தெனமும் ட்ரெயின்ல திருச்சிக்குப் போயிட்டு வந்துட்டு இருந்தார்…கல்யாணமான ரெண்டு மாசத்துலையே அவருக்கு மெட்ராசுக்கு மாத்தலாயிடுச்சு…அப்புறம் அவங்கள மெட்ராசுக்குப் போய் குடிவச்சிட்டு வந்தோம்…உங்கம்மா முழுகாம இருந்தப்ப, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்னு அஞ்சாவது மாசம் நானும் உங்கத் தாத்தாவும் போறோம்… புருசன விட்டுட்டு வர முடியாதுங்கறா… அப்புறம் ஏழாவது மாசம் நாங்க போய்ப்பேசினா எங்கள அங்க இருந்துக்க சொல்றாளேயொழிய உங்கப்பாவ விட்டுட்டு வர மாட்டேனுட்டா, அப்புறம் உங்கப்பாவும் உங்கம்மாகிட்ட கெஞ்சிதான் அனுப்பி வச்சாங்க…ஹ்ம்ம்ம்… உங்கப்பா அப்படி பாத்துக்கிட்டாரு உங்கம்மாவ…” பெருமூச்சு விட்டுக்கொண்டார் அவள் அம்மாச்சி.

“ம்ம்ம்…அப்புறம்”“அப்புறம் ஒரு மாசத்துலையே கொழந்தப் பொறக்கறதுக்கு ஆசுபத்திரில தேதிலாம் குறிச்சுக் கொடுத்துட்டாங்க… இருந்தாலும் பத்திருவது நாள் முன்னக்கூடி வந்துடலாம்னு சொன்னாங்க… அத கேட்டு உங்கப்பாவும் ஒரு மாசம் ரீவு போட்டு நம்ம வீட்டுக்கே வந்துட்டார்… எப்ப வலி வந்தாலும் ஆசுபத்திரி கூட்டிட்டுப் போறதுக்கு கார கொண்டாந்து வாசல்லையே நிப்பாட்டிக்கிட்டார்…அன்னைக்கு ஒங்கப்பாவுக்கு பொறந்தநாளு…காலையில 9 மணி இருக்கும்… உங்கம்மா லேசா வலிக்குதுனு சொன்னா… ஒடனே ஆசுபத்திரிக்கும் கூட்டிட்டுப் போயிட்டோம்… போகும்போதே சொல்லிக்கிட்டு வந்தா “நான் சொன்னமாதிரியே உங்க பிறந்தநாளன்னைக்கே நமக்கு கொழந்த பொறக்க போகுது”ன்னு… உங்கப்பாவுக்கும் சந்தோசம்தான்… அங்க பிரசவத்தப்பவும் உங்கம்மாகிட்டயேதான் உங்கப்பா இருந்தார்… அவர் கையதான் கெட்டியாப் புடிச்சிகிட்டு இருந்தாளாம் உங்கம்மா…தலப்பிரசவங்கறதால நாங்க உசுரக் கையிலப் புடிச்சிக்கிட்டு வெளிய நிக்குறோம்… நாங் கொலதெய்வத்த எல்லாம் வேண்டிகிட்டு இருக்கேன்… ஹும்… ஆனா ஒரு சாமிக்கும் கண்ணில்லாமப் போச்சே…” என்று சொல்லிக்கொண்டே அழ ஆரம்பித்தார்.அவர் அழுவதைப் பார்த்து அவள் அழ, அவர் முந்தானையில் முகத்தைத் துடைத்தபடி அழுகையை நிறுத்திவிட்டு ஆரம்பித்தார்.

“உங்க அப்பாதான் பாவம்… பொண்டாட்டி மயக்கமாதான் இருக்கானு நெனச்சு குளிப்பாட்டின பிள்ளைய எங்ககிட்ட வெளிய வந்து காட்டிட்டு இருக்கும்போதே டாக்டருங்க கூப்பிட்டு ஏதோ சொல்லவும் இடிஞ்சுபோன மனுசனா உள்ள போனவர்தான்…அதிகம் ரத்தம்போனதால உங்கம்மா உசுர் போச்சுன்றதெல்லாம் எங்களுக்கு பிற்பாடுதான் தெரியும்… அப்புறம் உங்கப்பா வேலைய திருச்சிக்கே மாத்திகிட்டு வந்துட்டாரு... உங்க அப்பாயியும், நானுந்தான் மொத ரெண்டு வருசம் உன்னப் பாத்துக்கிட்டதெல்லாம்…அப்புறம் உன்னையும் கூட்டிட்டு உங்கப்பா மெட்ராசுக்கேப் போயிட்டார்… உங்க சித்திய அவருக்கு ரெண்டாந்தாரமா கட்டிக்கொடுக்கலாம்னு உங்க சித்தியயையும் கேட்டுட்டு அவர்கிட்ட சொல்லும்போது இளவரசிக்குத் தங்கச்சின்னா எனக்கும் தங்கச்சி மாதிரிதான்னு சொல்லி மறுத்துட்டார்… அதுவுமில்லாம வேற கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லனும் சொன்னதுக்கப்புறம் அவர யாரும் கட்டாயப்படுத்தல… எல்லாமே நேத்து நடந்த மாதிரிதான் இருக்கு…ஆச்சு இருவத்தி ரெண்டு வருசம்”கொஞ்ச நேரம் இருவருமே அமைதியாக இருந்தார்கள்.

அவள் அம்மாச்சியே மறுபடியும் ஆரம்பித்தாள், “நாளைக்கு உனக்கு மட்டும் பொறந்தநாள் இல்லமா…உங்கப்பாவுக்கும்தான்… ஆனா உங்க அம்மாசெத்த நாளும் இதான்னு உங்கிட்ட மறச்சுட்டு, ஊர்ல வந்து உம்பொறந்த நாள கொண்டாட்றதெல்லாம் அதத்தெரிஞ்சு நீயும் இந்த நாள்ல வெசனப்படக்கூடாதுனுதான்… நீ சந்தோசமா இருக்கிறதப் பாத்துதான் அவரும் ஏதோ இருக்கார்… மெட்ராசுல இருந்து மதியம் கிளம்பிட்டேன்னு போன் பண்ணுனாரில்ல… ராத்திரிக்குள்ள எப்படியும் வந்துடுவார்…அவருகிட்ட நீ எதுவும் கேட்டுடாதம்மா…எப்பவும் போலவே நடந்துக்க…”அடுத்த நாள் குடும்பத்தினர் எல்லோரின் வாழ்த்துக்கள்+முத்தங்களோடு தன் இருபத்தியோராவது பிறந்தநாளைக் கொண்டாடினாள் தமிழ்.எல்லோரும் போன பிறகு அன்று மாலையில் தனிமையில் அவள் அப்பாவிடம் கேட்டாள்.

“ஏம்ப்பா நான் பிறந்தப்போதான் அம்மா எறந்தாங்கன்றத எங்கிட்ட மறச்சுட்டீங்க?”அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தார் அருள்.“இன்னைக்கு தான் உங்கப் பிறந்தநாளும்னும் எனக்குத் தெரியும்ப்பா. அம்மாவோட நினைவுநாளும் இன்னைக்குதான்னும் எனக்குத் தெரியும். நான் கஷ்டப் படக்கூடாதுன்னுதான் இத எங்கிட்ட இருந்து மறச்சிருக்கீங்கன்னாலும் இத தெரிஞ்சபின்னாடி எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா? நாம/நம்மள நேசிக்கிறவங்க சந்தோசமா இருக்கனும்ங்கறதுக்காக நம்ம கஷ்டத்த மறச்சுக்கறது நல்லதுதான். ஆனா என்னால இந்த ஒருநாளே முடியல…நீங்க எப்படி இத்தன வருசமா இருக்கீங்கனு எனக்குப் புரியலப்பா… உங்க கஷ்டம் இந்த வருசத்தோடப் போகட்டும். அடுத்த வருசம் இதே நாள் என்னோடப் பொறந்த நாளா இருக்க வேணாம். அம்மாவோட நினைவுநாளாதான் இருக்கனும்”

“நினைவு நாள்னு தனியா நெனச்சுக்க என்னமா இருக்கு? எல்லா நாளுமே…”

“ம்ம்ம்…இவ்வளவு நாளா நீங்க வேற கல்யாணம் பண்ணிக்காம இருக்கும்போதே அது தெரியுதுப்பா. ஆனா நான் சொல்றதுதான் இனிமே! இனிமே அம்மாவோடப் பிறந்தநாள் அன்னைக்கே நாமளும் பிறந்த நாள் கொண்டாடிக்கலாம். அம்மாவோட நினைவு நாள் அன்னைக்கு வேணாம். அவ்வளவுதான்!”கொஞ்சம் பாரம் குறைந்தவராயானார் அருள்.

“இந்தாங்க உங்களுக்கு என்னோட பிறந்தநாள் பரிசு” என்று சொல்லி அந்த டைரியையும் கொடுத்துவிட்டுப் போனாள்.

பிரசவத்துக்கு இளவரசி வரும்போது எடுத்துவந்து தொலைந்துபோன அந்த டைரி மீண்டும் கிடைத்ததும் ஆர்வமான்வராய் அதன் பக்கங்களைப் புரட்டியதில் மெல்லியப் புன்னகையுடன் பழைய நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தார் அருள்.

நினைவுகள் இருக்கும்வரை துயரங்கள் ஏதுமில்லை.

காதல் 01

இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்எப்படியேனும்
நுழைந்துவிடுகிறது உன் நினைவு!
*
எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று
பொய் சொல்லவில்லை. ஆனால்…ஒரு நொடிக்கு
குறைந்தது ஒரு முறையேனும்
உன்னைதான் நினைக்கிறேன்.
*
நீ பிரிந்தபிறகும் கூட
‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறது இதயம்!
*
இதயம் லேசாக்கிய உன் நினைவெல்லாம்
இன்று சுமக்க முடியா கனமாய் மாறுவதேன்?
*
உன்னை நினைத்துக்கொள்ள மறக்கும்
வரைபிரிந்துவிட்டதாய் சொல்வதெல்லாம் பொய்தான்!
*
முட்களை மட்டும்
பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!
*

Tuesday, February 12, 2008

தமிழ்ப் பழமொழிகள்

அகத்தினழகு முகத்தில் தெரியும்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
அடியாத மாடு படியாது.
அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
எறும்பூரக் கல்லும் தேயும்.
ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
காகம் திட்டி மாடு சாகாது.
காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
குரைக்கிற நாய் கடிக்காது.
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
தடியெடுத்தவன் தண்டக்காரன்.
தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
தன் வினை தன்னைச் சுடும்.
தனிமரம் தோப்பாகாது.
தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
நிறைகுடம் தளம்பாது.
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
விளையும் பயிரை முளையிலே தெரியும்.
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
வேலிக்கு ஓணான் சாட்சி.
வைக்கோற் போர் நாய் போல.



பொறியாளர்
கிருஷ்ணன் ஆர்

A Brief History of Last Sunday

The trick is not to arrange a festival; but to find people who can enjoy it. Have we lost our capacity for enjoyment in the seriousness with which we confront life and its difficulties? Isn't enjoyment something that is always going to be ours tomorrow? I think this was the basic idea which first put me on to the train of thought to write something about the last Sunday- a memory worth keeping.

The last Sunday when Krishnan and I woke up, it seemed like an ordinary day, as when we get up and get ready to hurry up for the breakfast and dash to office. I asked Krishnan if he was interested to give me his company to the holy place of Neemach Mata, as usual he nodded. We made a visit to that place and get back to our room and waited for sometime to have lunch. We did not know what was hidden in the bowel of future because if you are not acquainted with a great personality - Kamlesh Kumar (The Jadugar) only then you can think of your plans otherwise if Kamlesh is there you will never know what is going to happen in the next moment.

Krishnan and I came to Transit House and had our lunch, I was feeling tired and wanted to sleep that afternoon but Krishnan was more interested in gossiping and whiling put his time with RK HOD, Vaibhav, Kamlesh, Sunaniana and Deepshikha. Vaibhav led all of us to an intelectual discussion (As he always tries to impose on us) asking that if dreams are colored or in black and white. Kamlesh told all of us that they are colored as he had always seen his princess wearing red saree but I was not able to make any deduction as when ever I dream my princess was not wearing any saree,(she just wears Salwar –Suit, and it is white in clolor). Anyway Sunanyana told that she was going to watch a movie with Hemlata DIDI, as usual Kamlesh made an intrusions to offer his soothing company and I also joined him.Both of us went to Chetak and (Thank God!!) it was NO ENTRY and we were saved …..(This I could realize only after getting back to Transit House).

After reaching Transit House, we were making some plans how we could enjoy that evening. Sing a song, take a walk, have a bath, converse with a friends were the classical advice for heaviness of enjoyment. Seeking a spot where we could hear the rustle of the leaves, feel the wind in our hair – whatever brings release to your over-taut nerves – this was imperative to discover about ourselves and ever more imperative that we do! (Jaisamand was also a proposal….). All of a sudden, Kamlesh was so jovial before anyone could understand; we saw Naveen, Karthikeyan and Gowri there with their car. Everything seemed to be planned when Kamlesh took keys and we four (Krishnan, Vaibhav, Kamlesh and me) went to Ekling Ji. It was a horrible experience because kamlesh drove that car at 140 Km an hour and I was busy in thinking if he gave some more thrust on accelerator we might fly off to watch the glory of life which was lost recently (Just after leaving the Institute).

We were just waving in the car like mercury kept on a plate and praying to God to bless other vehicles to take care of us. We also got to know some subtle philoshphy of life which can take us to heights, like in his swift speed of driving Kamlesh saw a buffallo crossing the road he rang the horn but it was the buffalo to cross the road and leaving Kamlesh pressing the brakes with full might. That illiterate buffallo follows the School of Thought that if you have to do something then just do it and let others to wait and help you to achieve the same. But contararly you do not have to be a Pig, like wise getting in dillema either intentioanlly or unintentionally in crossing the road, and causing an accident in which others are hurt, and it just gets up and making some stretching and shrinking of its body to see whether it is alright (It is always alright in this case…) and just flees away from the eyes of helpless fellow relishing the dust.

We moved a little further, suddnly kamlesh traced a very sharpe curve, it was because of a young chap riding a bike, one idea flashed into my mind that we should recommend his father "Baap se kah do ki hawai jahaj dilwa de …". Finally keeping quite we returned back to Transit House and also nobody commented any thing about the driving of Kamlesh, because every body knew when you cannot escape rape better you enjoy, we enjoyed his driving. As we reached Transit Hosue Deepshikha was making some preparation for dinner, truly speaking that was the cynosure of the day. Formerly, picnic meant a gathering near a tourist palce, an entertainment at which each person contributed some dish to a common table for all to share. But at this time we made a picnic unforseen. When we allow ourselves to enjoy the good things of life, the good things that God has made, the delights of friendship and also of solitude, whatever form our relaxation or enjoyment takes is not so important; but it should be such that we can be drawn out of ourselves; that we can recapture the spirit of play.

The meals were all marked by joy and relaxation blended with some medley of music and songs. Just as there are many types of lovers, there are many kinds of love. Love is inherent in all human cultures. Expressions of love may include the love for a 'soul' or mind, the love of laws and organizations, love for a body, love for nature, love of food, love of money, love for learning, love of power, love of fame, love for the respect of others, etc. Happiness, pleasure or joy is the emotional state of being happy. Happiness differs from joy and glee in degree, if not in kind. To be happy implies a considered viewpoint which lasts longer than the transitory feelings of pleasure which are connoted by joy and glee. Thus happiness is often regarded as priceless. I love to enjoy my holidays like we enjoyed the last Sunday. And finally I would like to say that People shall be called to account for all the permitted pleasures they failed to enjoy.

Script by Dr. Dipankar, United States.