மீன் தொட்டி

Wednesday, June 2, 2010

கவிதைகள்

எல்லோருக்கும்
முகம் காட்டும் கண்ணாடி
உனக்கு மட்டும்
நிலவு காட்டுவதெப்ப‍டி?

***

உனக்கான உடைகளை
அளவெடுத்து தைக்கிறாயா?
அழகெடுத்து தைக்கிறாயா?

***

சந்தித்த கணத்தில்
கட்டித்த‍ழுவுகின்றன!
காதலர்கள்…
நாமா? நம் உதடுகளா?

***

மயிலிறகு சேகரிக்கும்
உனக்குத் தெரியுமா…
காற்றில் உதிரும்
உன் கூந்தல் இழைகளை
மயில்கள் சேகரித்து செல்வது?

***

அம்மா பெய‌ர் என்ன‌வென்று கேட்டால்
“அம்மா” என்றே சொல்லுகிற‌ குழ‌ந்தையைப்போல‌
உன்னை ஏன் பிடித்திருக்கிற‌தென‌க் கேட்டால்
உன்னைப் பிடித்திருக்கிற‌து
என்று மட்டுமே சொல்ல‌ முடிகிற‌து.

***

அச்ச‍டித்துக் கொடுத்த‍ இந்த‌ ஐந்தையுமே
‘சுமாராத்தான் இருக்கு’ என்றெழுதி
திருப்பிக்கொடுத்து விட்டாள்!
மீண்டும் வாசித்துப் பார்த்தேன்.
அச்ச‍டித்த‍ எழுத்துக்க‍ள்
எல்லாமே சுமாராகத்தான் இருந்தன
அவள் கையெழுத்துக்கு அருகில்

1 comment:

  1. அனைத்து கவிதைகளும் அழகா இருக்கு!

    ReplyDelete